சூனியத்தை எடுக்கலைன்னா உயிருக்கே ஆபத்தாகிடும்..நேக்காக உருட்டிய மந்திரவாதி.. உண்மைன்னு நம்பிய குடும்பத்துக்கு நேர்ந்த கதி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பரிகாரம் செய்வதாக கூறி தங்க நகைகளுடன் ஓட்டம் பிடித்த போலி மந்திரவாதியை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

சேலம் லைன்மேடு பென்சன் லைன் 2 வது தெருவை சேர்ந்தவர் அக்பர் கான். இவர் பாத்திர கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஜான் பேகம். வழக்கம்போல அக்பர் வேலைக்கு சென்றுவிட, அவரது மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மந்திரவாதி ஒருவர் பேகத்திடம் உங்களது வீட்டில் பில்லி, சூனியம் ஆகியவை இருப்பதாக பயமுறுத்தியுள்ளார். மேலும் இவற்றை உடனடியாக எடுக்காவிட்டால் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர் கூறியதை கேட்டு பேகம் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.
பரிகாரம்
வீட்டில் உள்ள பில்லி, சூனியத்தை எடுக்கவில்லை என்றால் உயிரிழப்புகள் ஏற்படும் என அந்த மந்திரவாதி மிரட்டவே, அதிர்ச்சியடைந்த பேகம் பரிகாரம் செய்ய ஒத்துக்கொண்டிருக்கிறார். இதனையடுத்து அவரை வீட்டுக்குள் அழைத்து பரிகாரம் செய்யுமாறு பேகம் கூறியுள்ளார். அப்போது, தனது பையில் இருந்த மண்பாண்டத்தை எடுத்த அந்த மர்ம நபர் அதில் வீட்டில் உள்ள தங்கத்தினை போடுமாறு கூறியுள்ளார்.
அதனை நம்பிய பேகமும் தோடு, மோதிரம் ஆகியவற்றை அந்த மண்பாண்டத்தில் போட்டிருக்கிறார். அப்போது, சூழ்ச்சியாக தனது பையில் இருந்த இன்னொரு மண்பாண்டத்தை பேகத்திடம் கொடுத்திருக்கிறார் அந்த மந்திரவாதி. மேலும், அதனை இப்போது பிரித்து பார்க்க கூடாது எனவும், வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக சேந்து தான் பிரித்து பார்க்கவேண்டும் என அந்த மர்ம நபர் கூறியுள்ளார். அதனபின்னர் உடனடியாக அவர் அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார்.
அதிர்ச்சி
இதனையடுத்து அக்பர் வீட்டுக்கு திரும்பிய பின்னர் அவரிடம் விஷயத்தை சொல்லி, அந்த மண்பாண்டத்தை திறந்திருக்கிறார் பேகம். அப்போது அது காலியாக இருக்கவே தான் ஏமாற்றப்பட்டது அப்போதுதான் அவருக்கு தெரிந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்பர் - பேகம் தம்பதி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார்கள்.
பரிகாரம் செய்வதாக கூறி, ஒன்றே முக்கால் சவரன் தங்க நகைகளை திருடிச்சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
