200 ரன்கள் அடித்த சுப்மன் கில்.. அதுக்காக ஷர்துல் செஞ்ச தியாகத்தை யாராச்சும் கவனிச்சீங்களா?"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து பல்வேறு கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது.
அந்த வகையில், தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் இந்திய அணி ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி சமீபத்தில் நடந்திருந்தது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 அவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புகளுக்கு 349 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 200 ரன் அடித்து ஒருநாள் போட்டியில் கடந்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். மிக இளம் வயதில் ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்த சுப்மன் கில், சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, சேவாக் மற்றும் இஷான் கிஷன் ஆகிய வீரர்களை தொடர்ந்து ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
தொடர்ந்து இந்திய அணி இலக்கை நோக்கி அடிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இருந்து தடுமாற, 7 ஆவது வீரராக வந்த மைக்கேல் பிரேஸ்வெல், தனியாளாக அதிரடி காட்டினார். இதனால், அவர்களுக்கும் வெற்றி வாய்ப்பு உருவாக, போட்டியில் விறுவிறுப்பும் தொற்றிக் கொண்டது.
இருந்த போதிலும், கடைசி கட்டத்தில் விக்கெட்டுகள் விழவே நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது. 78 பந்துகளில் 140 ரன்கள் எடுத்த பிரேஸ்வெல், கடைசி விக்கெட்டாக வெளியேற இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கவும் செய்கிறது.
இந்த நிலையில், சுப்மன் கில்லுக்காக தியாகம் ஒன்றையும் ஷர்துல் தாகூர் செய்துள்ளார். சுப்மன் கில் 169 ரன்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவருடன் களத்தில் ஷர்துல் தாகூர் இருந்தார். அந்த சமயத்தில் பந்து ஒன்றை எதிர்கொண்ட சுப்மன் கில், அதனை அடித்து விட்டு வேகமாக ரன் ஓடவும் முயன்றுள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில் எதிரே நின்ற ஷர்துல் தாகூர், சுப்மன் கில் ஓடி வருவதை கவனிக்கவில்லை.
மறுபக்கம் ஷர்துல் அருகே கில் வந்துவிட, அவர் ஆட்டமிழந்து விடக்கூடாது என்பதற்காக கிரீஸில் இருந்து வெளியேறி தானாக முன்வந்து தனது விக்கெட்டை கொடுத்து வெளியேறினார் ஷர்துல். கிட்டத்தட்ட இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சுப்மன் கில், ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து தனது ஒரு நாள் போட்டியில் முதல் இரட்டை சதத்தையும் பதிவு செய்திருந்தார்.
அதிக ரன்கள் எடுத்து களத்தில் இருந்த வீரர் அவுட் ஆகக்கூடாது என்பதில் தெளிவாக இருந்த ஷர்துல், தனது விக்கெட்டை தியாகமாக கொடுத்த விஷயம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.