ஹிட்மேனை போலவே 'பேட்டிங்' செய்து காட்டிய 'மகள்'.. "ப்பா, செம 'க்யூட்'டா பண்றா.." நெட்டிசன்களின் மனதை கொள்ளை கொண்ட அசத்தல் 'வீடியோ'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 31, 2021 10:50 PM

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய அணியின் வீரர்கள், அடுத்ததாக ஐபிஎல் தொடருக்கு வேண்டி, தங்களது அணியுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

rohit sharma daughter samaira cheers up for mumbai indians

இதில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, கடந்த திங்கட்கிழமை முதல் தனது அணியுடன் இணைந்துள்ளார். இந்த சீசனின் முதல் போட்டியிலேயே, பெங்களூர் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது. மேலும், இதற்காக ரோஹித் ஷர்மாவை ஊக்குவிக்க, அவருடன் அவரது மனைவி ரித்திகா மற்றும் மகள் சமைரா அவருடன் இணைந்துள்ளனர்.

rohit sharma daughter samaira cheers up for mumbai indians

இந்நிலையில், ரோஹித் ஷர்மா தனது மனைவி மற்றும் மகளுடன் இருப்பது தொடர்பான வீடியோ ஒன்றை மும்பை இந்தியன்ஸ் அணி, தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், ரோஹித்தின் மகள் சமைரா, தனது தந்தையின் ஹெல்மெட்டை போட்டுக் கொண்டு, அவரைப் போலவே புல் ஷாட் அடித்துக் காட்டுகிறார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பெயரை க்யூட்டாக சொல்லும் சமைரா, மும்பை அணியை தான் எப்படி ஊக்குவிக்கப் போகிறேன் என்பதையும் செய்து காட்டுகிறார்.

 

மழலை மொழியில், சமைரா மிகவும் அழகாக பேசும் இந்த வீடியோ, ஐபிஎல் ரசிகர்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியே ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rohit sharma daughter samaira cheers up for mumbai indians | Sports News.