சென்னை: மெட்ரோ ரயில் பணியில் இருந்த கிரேன் மோதியதால் சேதமான மாநகர பேருந்து.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Dec 02, 2022 07:03 PM

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணி நடந்து கொண்டு வந்திருக்கிறது. இதன் காரணமாக ஆற்காடு ரோட்டில் வடபழனி முதல் போரூர் வரை சில இடங்களில் ஒரு வழி பாதை பயணம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

MTC bus collides with Metro rail crane in Vadapalani

இப்படி சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சில நேரங்களில் பகலில் வாகன போக்குவரத்துக்கள் அதிகம் இருப்பதால் இரவு நேரங்களில் ஊழியர்கள் கண்விழித்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் பணிக்காக ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்படுவது உண்டு. இந்த நிலையில்தான், சென்னை வடபழனியில் கிரேன் ஒன்று மாநகரப் பேருந்து மீது விழுந்ததை அடுத்து மாநகர பேருந்து சேதத்துக்குள்ளாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டிசம்பர் 2-ஆம் தேதி (இன்று) காலை 5 மணி அளவில் சென்னை வடபழனி பணிமனையில் இருந்து 159 ஏ என்கிற பேருந்து கோயம்பேடை நோக்கி சென்றபோதுதான் இந்த விபத்து நடந்திருக்கிறது.  வடபழனியில் மெட்ரோ பணிகள் நடந்து கொண்டிருக்கும் பகுதி வழியாக இந்த பேருந்து செல்ல, அப்போது மெட்ரோ பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் ஒன்று எதிர்பாராத விதமாக பேருந்தின் மீது மோதியதால் பேருந்தின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்திருக்கிறது.

நல்ல வேளையாக,  பயணிகள் யாரும் இந்த பேருந்தில் பயணிக்கவில்லை, ஓட்டுநர் பழனி சிறிய காயத்துடன் உயிர் தப்பி இருக்கிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #சென்னை #மெட்ரோ #ரயில் #விபத்து #பேருந்து #MTC #MTC BUS #CHENNAI #METRO #ACCIDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. MTC bus collides with Metro rail crane in Vadapalani | Tamil Nadu News.