"கடைசியா ஒரு தடவ,,.. அவ முகத்த பாக்க முடியாம பண்ணிட்டீங்களே"... "இந்த நெலம யாருக்கும் வரக்கூடாதுங்க"... கதறி அழும் 'கணவர்'.. நடந்தது 'என்ன'??
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரி வில்லியனூர் மணவெளி பகுதியை சேர்ந்தவர் யோகநாதன். இவரது மனைவி குணவேலி கடந்த சில ஆண்டுகளாக மூச்சு திணறல் நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் குணவேலிக்கு மூச்சுத்திணறல் அதிகமான நிலையில், அவரை யோகநாதன் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளார். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் குணவேலி உயிரிழந்தார். பின்னர், அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்ய, புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரிக்கு கொரோனா பரிசோதனை செய்யும்படி, தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியது.
அங்கு அவருக்கு கொரோனா தொற்று இல்லை என ஆய்வறிக்கை வந்ததையடுத்து, மனைவியின் உடலை வாங்கச் சென்ற யோகநாதன் மற்றும் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்குள்ள பிணவறையில் சென்று பார்த்த போது குணவேலியின் உடலைக் காணவில்லை. இது தொடர்பாக யோகநாதன் மற்றும் குடும்பத்தினர் புகாரளித்த நிலையில், உடல் எங்கு சென்றது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவலாக, உடலை யாரோ மாற்றி எடுத்துச் சென்ற தகவல் தெரிய வந்தது. குணவேலியின் உடலின் அருகே மூதாட்டியின் உடல் ஒன்று இருந்துள்ளது. அந்த மூதாட்டியின் உறவினர்கள், குணவேலி உடலை தவறுதலாக அடையாளம் காட்டி எடுத்து சென்று இறுதி சடங்குகளை செய்துள்ளதாக தெரிகிறது. கவனக்குறைவாக நடைபெற்ற இந்த செயல் தொடர்பாக, சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென துணை மாவட்ட ஆட்சியரிடம் யோகநாதன் புகாரளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து யோகநாதன் கூறுகையில், 'எனது மனைவி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, அவர் மீண்டு வர வேண்டும் என நினைத்தேன். ஆனால் அது நடைபெறவில்லை. தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்த போது, தொற்று உறுதியானால், அவரது முகத்தை பார்க்க முடியாதே என மனம் வருந்தினேன். ஆனால், கொரோனா இல்லை என தெரிந்த போது, முறைப்படி இறுதி சடங்குகள் செய்யலாம் என நினைத்திருந்தேன். கொரோனா தொற்று இல்லை என்றாலும் அவரது உடல் கிடைக்காமல் இருக்கும்போது எப்படியிருக்கும்' என மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மனைவி இழப்புக்கு ஈடு செய்ய எதுவுமில்லை என வருந்தும் யோகநாதன், இந்த நிலைமை எந்த கணவருக்கும் வர கூடாது என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
