சென்னையில் விடாமல் கொட்டி தீர்த்த 'பேய்' மழை...! '2015-க்கு அப்புறம் ஒரு காட்டு காட்டிடுச்சு...' இன்னும் 'கனமழை' தொடருமா...? - தமிழ்நாடு 'வெதர்மேன்' ரிப்போர்ட்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
குறிப்பாக, நவம்பர் 9-ஆம் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று (06-11-2021) இரவு முதல் இன்று அதிகாலை வரை சென்னையில் பலத்த இடி மின்னலுடன் கூடிய பெருமழை பெய்தது. ஒவ்வொரு இடியும் 10 முதல் 15 வினாடிகள் நீடிக்கும் பேரிடியாக விழுந்தது. அதிகபட்சமாக சென்னையில் 20 செ.மீ மழை பதிவானது. மேலும், சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கும் காரணத்தால், சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைமற்றும் அதிகன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு : பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி
1913
04425619206
04425619207
04425619208
9445477205 எண்ணிற்கு வாட்ஸாப் மூலமாக புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.