இந்தியா- தென் ஆப்பிரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கேப்டன் கோலி மிகப்பெரிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்வதாகத் தேர்வு செய்து ஆடி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றுள்ளது. அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி விளையாட இருக்கிறது.
முதலில் டெஸ்ட் தொடர் இன்று தென் ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி இன்று 26-ம் தேதி, செஞ்சூரியனில் நடக்கத் தொடங்கி உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிகப்படியாக டாஸ் வென்ற கேப்டன்களுள் கோலி முதல் இடத்தில் உள்ளார்.
இத்தனைக் காலம் அதிக டாஸ் வென்ற கேப்டன்களுள் முதல் இடத்தில் முகமது அசாருதின் இருந்தார். தற்போது இந்திய அணி கேப்டன் கோலி முதல் இடத்தைக் கைப்பற்றி உள்ளார். இதுவரையில் 68 டெஸ்ட் போட்டிகளில் 30 போட்டிகளில் டாஸ் வென்று கோலி முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இதில் 23 முறை இந்திய அணிக்கு வெற்றியும் தேடித் தந்துள்ளார் கோலி.
டாஸ் வென்ற பின்னர் கோலி கூறுகையில், “விக்கெட் எடுக்கலாம். மைதானத்தில் நிறைய புற்கள் உள்ளது. ஆனால், முந்தைய போட்டிகளை வைத்துப் பார்த்தால் 2-ம் நாளில் இருந்து வேகம் அதிகரிக்கும் என நினைக்கிறேன். டாஸ் வென்றது நல்ல நம்பிக்கையைக் கொடுத்து உள்ளது. கிரிக்கெட் விளையாட மிகவும் சவால் ஆக இருக்கும். மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே எங்களுக்கு நல்லது நடக்கும் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.