ஐஐடி, அண்ணா பல்கலைக்கழத்தில் கொரோனா பரவல் எதிரொலி.. சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கல்லூரிகளில் கொரோனா வேகமாக பரவி வருவதால் சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

சென்னை ஐஐடி கல்லூரியில் கடந்த 9ம் தேதி 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை அடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 400-க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 87 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று முன்தினம் ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 183-ஆக அதிகரித்தது. மேலும் 8 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அதேபோல் அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருக்கும் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் தொற்று உறுதியானது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மற்ற செய்திகள்
