'நாளைக்கு 5 மணிநேரம்’...!!! ‘எந்த ஏரியாவில் எல்லாம் பவர்கட்’...!! ‘விபரங்கள் உள்ளே’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் நாளை (நவம்பர் 10) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் எவை எவை என்பதை மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் நாளை (நவம்பர் 10) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணிகளுக்காக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கே.கே நகர் பகுதி : கே.கே நகர் ஒரு பகுதி, ராஜமன்னர் சாலை, ராமசாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே. சண்முகம் சாலை, நெசப்பாக்கம் ஒரு பகுதி, பி.டி.ராஜன் சாலை ஒரு பகுதி, அசோக்நகர் அவென்யூ, கண்ணிகாபுரம், விஜயராகவபுரம், 80 அடி சாலை ஆகிய பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
