திடீர்னு வெடிச்ச ஃப்ரிட்ஜ்.. வீட்டுக்கு சென்ற போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்.. பொள்ளாச்சியில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Mar 10, 2023 02:39 PM

பொள்ளாச்சி அருகே காவல் ஆய்வாளர் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Pollachi Fridge explosion Police inspector dies at the spot

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | காதலியை கரம் பிடித்த பிரபல RCB வீரர்.. வாழ்த்தும் கிரிக்கெட் பிரபலங்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்

சபரிநாத்

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சபரிநாத் .அவருடைய வயது 40. இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூரை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில் பணி செய்து வந்ததால் சபரிநாத் அவ்வப்போது மட்டுமே தனது சொந்த ஊரான நல்லூருக்கு சென்று வருவது வழக்கம். சமீபத்தில் சபரிநாத்தின் மனைவி உடல்நல குறைவு காரணமாக மரணம் அடைந்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் தனது சொந்த ஊருக்கு சபரிநாத் சென்றிருக்கிறார். நல்லூரில் உள்ள தனது வீட்டில் மாடியில் இருக்கும் ஒரு பகுதியை வாடகைக்கு சபரிநாத் விட்டிருக்கிறார். விடுமுறைக்காக நல்லூர் செல்லும் போது மற்றொரு பகுதியில் அவர் தங்கி வந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் மருத்துவ விடுப்பில் நல்லூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று இருக்கிறார் சபரிநாத்.

Pollachi Fridge explosion Police inspector dies at the spot

Images are subject to © copyright to their respective owners.

விபத்து

இந்த நிலையில் நேற்று சபரிநாத்தின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்து இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். இதனிடையே வீட்டிற்குள் அவர்கள் சென்றபோது சபரிநாத் மற்றும் அதே வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த சாந்தி ஆகிய இரண்டு பேரும் தீயில் கருகி உயிரிழந்தது தெரிய வந்திருக்கிறது.

Pollachi Fridge explosion Police inspector dies at the spot

Images are subject to © copyright to their respective owners.

விசாரணை

இதனை அடுத்து இருவரது உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தடயவியல் ஆய்வு குழுவினர்களும் சபரிநாத்தின் வீட்டில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவ விடுப்பில் சொந்த ஊர் சென்ற காவல் ஆய்வாளர் சபரிநாத் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தாயார் மறைவு.. சோகத்தில் ரசிகர்கள்.. கருப்பு பட்டை அணிந்து களமிறங்கிய வீரர்கள்!!

Tags : #POLLACHI #FRIDGE #FRIDGE EXPLOSION #POLICE INSPECTOR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pollachi Fridge explosion Police inspector dies at the spot | Tamil Nadu News.