Kaateri logo top

66 வருசம் முன் இருந்த 'ஃப்ரிட்ஜ்'.. "இந்த ஒரு வசதியே போதுமே.." ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்.. அப்படி என்ன இருக்கு??

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Aug 02, 2022 11:33 AM

இன்றைய காலகட்டத்தில், டெக்னாலஜியின் முன்னேற்றங்கள் காரணமாக, நமது வாழ்க்கையும் மிக எளிதாகவும், வசதியாகவும் மாற்றி உள்ளது.

66 yr old fridge advertisement viral among netizens

Also Read | டிவி பாத்துட்டு இருந்த குடும்பம்.. "கீழ இருந்த டேபிள உத்து பாத்தப்போ.." அதுல ஒருத்தர் கவனிச்ச விஷயம்.. "இது எப்படி இங்கன்னு எல்லாரும் ஆடி போய்ட்டாங்க.."

இன்னும் நாட்கள் செல்ல செல்ல, நம்மை சுற்றியுள்ள வேலைகளை இன்னும் எளிதாக்கும் புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளும் நிச்சயம் உருவாகும்.

தற்போதுள்ள வளர்ச்சிகளில், குடும்பத்தினர்களுக்கு மிகவும் பயன்படும் பொருட்களில் ஒன்றாக பார்க்கப்படுவது வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜ். காய்கறிகள் கெட்டு போகாமல் பார்த்து கொள்ளவும், உணவு பொருட்களை உள்ளே வைக்கவும், கோடை காலத்தில் புத்துணர்ச்சி தருவதற்கும் என பல விஷயஙங்களில், இன்றயமையாத ஒன்றாக குளிர் சாதன பெட்டி இருந்து வருகிறது.

ஒவ்வொரு காலகட்டத்திற்கேற்ப, ஃப்ரிட்ஜிலும் புது புது கண்டுபிடிப்புகள் நம்மை மலைக்க வைத்தும் வருகிறது. இந்நிலையில், சுமார் 66 ஆண்டுகளுக்கு முன்பு, பயன்படுத்தப்பட்ட ஃப்ரிட்ஜ் ஒன்றின் விளம்பர வீடியோ, தற்போது இணையத்தில் வெளியாகி, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு காரணம், தற்போதுள்ள குளிர்சாதன பெட்டியை விட, 66 ஆண்டுகள் முன்புள்ளதில் நிறைய சிறப்பம்சங்களுடன் கூடிய வசதிகள் இருந்தது தான்.

66 yr old fridge advertisement viral among netizens

வைரலாகும் அந்த விளம்பரத்தில் வரும் வீடியோவில், சிங்கிள் டோர் ஃப்ரிட்ஜ் இடம் பெற்றுள்ளது. உள்ளே பல வகையான பொருட்களை தனித்தனியாக வைப்பதற்கு, உருவாக்கப்பட்டுள்ள இட வசதிகள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் கூட, இப்படி ஒரு ஃப்ரிட்ஜ இல்லை என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

66 yr old fridge advertisement viral among netizens

தற்போதுள்ள குளிர்சாதன பெட்டியில், காய்கறிகளை வைப்பது போன்று ஒரு இடம், 1956-ல் உள்ள இந்த ஃப்ரிட்ஜில் இருந்தாலும், அது அமைக்கப்பட்டுள்ள விதம், சிறப்பாக உள்ளது. அதே போல, ஃப்ரிட்ஜில் உள்ள ஐஸ் கட்டிகளை எடுக்கவும் அதில் ஒரு சிறப்பான தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது. ஐஸ் ட்ரேவை ஒரு இடத்தில் வைத்து தலை கீழாக இழுத்தால், ஒரு பெட்டியில் மொத்தமாக ஐஸ் கட்டிகள் வந்து விழுந்து விடும்.

66 yr old fridge advertisement viral among netizens

இப்படி பல விஷயங்கள், இன்று இல்லாதது கூட அன்றுள்ள ஃப்ரிட்ஜில் இருந்துள்ளது, நெட்டிசன்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. சுமார் 11 மில்லயன் பேர் வரை இந்த வீடியோவை பார்த்துள்ள நிலையில், அதிகம் ட்ரெண்ட் ஆகியும் வருகிறது.

Also Read | "மகன நெனச்சு ஒண்ணும் நான் பெருமைப்படல, ஏன்னா.." எலான் மஸ்க் பற்றி தந்தை எரோல் சொன்ன பரபரப்பு கருத்து..

Tags : #FRIDGE #OLD FRIDGE #OLD FRIDGE ADVERTISEMENT #ஃப்ரிட்ஜ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 66 yr old fridge advertisement viral among netizens | World News.