'ஓரமா போய் விளையாடுங்கப்பா!'.. போலி தடியடி நடத்திய போலீஸ்!.. சாதூரியத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட ‘இரண்டு ஊர் சண்டை’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள இரண்டு கிராமங்கள் தான் எஸ்.பி பாளையம் மற்றும் ஊராங்கன்னி ஆகிய ஊர்கள் .

இந்த கிராமங்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், அந்த மோதலின் காலகால நீட்சியாக தற்போது மீண்டும் இரண்டு கிராமத்தினரும் கலவரம் செய்ய ஓரிடத்தில் கூடி, தாக்குதல் நிகழ்த்திக் கொள்ளத் தயாராகினர்.
ஆனால் இதை எப்படியோ அறிந்த போலீஸார் முன்பாகவே சம்மந்தப்பட்ட இடத்தில் படையோடு குவிந்தனர். அங்கு கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படும் அளவுக்கு ஒரு தடுப்பும் தடியடியும் போலீஸாருக்கும் கலவரக் காரர்களுக்கும் இடையே நடந்தது.
ஆனால் அதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இது உண்மையில் கலவரம் அல்ல. கலவரம் செய்ய திட்டமிட்டு வந்த ஊர்க்காரர்களுக்கும், ஏற்கனவே அங்கு வந்திருந்த போலீஸாருக்கும் இடையே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ சூரி-சிவகார்த்திகேயன் போல ஒரு ஒத்திகை கலவரம் நடந்துள்ளது.
கலவரம் செய்ய வந்தவர்களை தடுப்பது போல, தடுப்பதுவும், கலவரம் செய்ய வந்த கிராம மக்கள் வேடிக்கை பார்த்தபடி நிற்க, இளைஞர்கள் சிலர் மட்டும் போலீஸாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபடுவது போல் ஈடுபட, போலீஸார் உட்பட கிராம மக்கள் சிரித்துக் கொண்டே சண்டை போடுவது போல ஆக்டிங்கை போட்டுவிட்டு கலைந்து சென்றனர்.
எனினும் கலவரம் செய்யவே தீவிரமாக வந்த ஊர்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த காமெடியான நிகழ்வால், நடக்கவிருந்த கலவரம் தடுக்கப்பட்டது.

மற்ற செய்திகள்
