'சென்னையில் நடந்து செல்லும் பெண்களை குறிவைக்கும் ஆசாமிகள்'... 'யார் அந்த டூவீலர் ஆசாமிகள்'... தீவிர விசாரணையில் காவல்துறை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் நடந்து செல்லும் பெண்களை முதுகில் தட்டி செல்லும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் வெவ்வேறு பகுதிகளில் நடந்து சென்ற 3 பெண்களை இருசக்கர வாகனத்தில் வந்த ஆசாமிகள் முதுகில் தட்டி விட்டுச் சென்றுள்ளார்கள். விருகம்பாக்கம் இளங்கோ நகர் முதல் தெருவில் கல்லூரி மாணவி ஒருவர் தனது தோழியுடன் நடந்து வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பாலியல் தொல்லை கொடுத்துத் தப்பியோடியுள்ளார். அதேபோன்று விருகம்பாக்கம் இளங்கோ நகர் இரண்டாவது தெருவில் தனது தாயாருடன் நடந்து வந்த பெண்ணுக்கும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது.
டெண்டல் மருத்துவமனை உதவியாளராக வேலை செய்து வரும் அந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் முதுகில் தட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்கள். அதனை தொடர்ந்து விருகம்பாக்கம் நடேசன் தெருவில் நடந்து சென்ற பெண் உதவி பேராசிரியரை இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் முதுகில் தட்டி பாலியல் தொல்லை கொடுத்துத் தப்பியோடியுள்ளார்.
இதையடுத்து நடந்த சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட 3 பெண்களும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளிக்க சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

மற்ற செய்திகள்
