'சார், மேடம் வந்துட்டாங்க'... 'ஓடி வந்து சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர்'... 'அப்படியே ஒரு நிமிடம் அமைதியான அந்த இடம்'... நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jan 04, 2021 11:57 AM

ஒரு இன்ஸ்பெக்டராக பல மேலதிகாரிகளுக்கு சல்யூட்  நடித்திருப்பார். ஆனால் இப்படி ஒரு உணர்ச்சி மிகுந்த சல்யூட்டை அவர் நிச்சயம் அடித்திருக்க மாட்டார்.

Circle Inspector Shyam Sundar salutes his DSP daughter at Tirupati

ஆந்திரா மாநிலத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேர்வில் வெற்றி பெற்றவர் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி. இவர் தனது பயிற்சியை முடித்து விட்டு தற்போது காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி திருப்பதியில்  நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார். அப்போது அங்கு பணியிலிருந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் ஓடி வந்து பணி நிமித்தமாக ஜெஸ்ஸி பிரசாந்திக்கு சல்யூட் அடித்தார்.

இந்த காட்சியினை பார்த்த அங்கிருந்த காவலர்கள் மற்றும் சக அதிகாரிகள் என அனைவரும் ஒரு நிமிடம் அப்படியே நெகிழ்ச்சி மிகுதியால் அமைதியானார்கள். காரணம் ஷியாம் சுந்தர் ஓடி வந்து சல்யூட் அடித்தது வேறு யாருக்கும் அல்ல. தனது செல்ல மகள் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்திக்குத் தான். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது என்பது மிகவும் அரிதான ஒரு நிகழ்வு ஆகும்.

Circle Inspector Shyam Sundar salutes his DSP daughter at Tirupati

இந்த நெகிழ்ச்சியான தருணம் குறித்துப் பேசிய ஷியாம் சுந்தர், ''ஒரு தந்தையாக இதை விடப் பெருமை மிகு தருணம் என்ன இருக்க முடியும். வீட்டில் தான் அப்பா-மகள் உறவு எல்லாம். ஆனால் பனியின் போது அவர் எனக்கு மேலதிகாரி'' தான் எனப் பெருமையுடன் கூறியுள்ளார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்துப் பேசிய ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி, ''இப்படியான ஒரு நெகிழ்ச்சி தருணம் எனது வாழ்நாளில் நடக்கும் எனக் கனவிலும் நினைக்கவில்லை. ஒரு மகளாகப் பெருமையும், மகிழ்ச்சியும் அடைவதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Circle Inspector Shyam Sundar salutes his DSP daughter at Tirupati | India News.