'இனியும் இப்படியே விட்டா வேலைக்கே ஆகாது'... 'அதிரடியில் இறங்கும் சிஎஸ்கே நிர்வாகம்?!!'... 'சென்னை அணியில் நடக்கவுள்ள முக்கிய மாற்றங்கள்!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Oct 22, 2020 04:38 PM

சிஎஸ்கே நிர்வாகம் அந்த அணி வீரர்கள் மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

IPL2021 Dhonis CSK To Take Tough Calls Several Players Could Be Axed

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மிக மோசமாக விளையாடி வரும் நிலையில் அந்த அணி பயங்கரமான சரிவை சந்தித்துள்ளது. இதுவரை விளையாடிய அனைத்து சீசனிலும் பிளே ஆப் சென்ற ஒரே அணி என்ற பெருமையை பெற்றுள்ள சிஎஸ்கே இந்த வருடம் அதையே இழக்கும் நிலைக்கு சென்றுள்ளது. சிஎஸ்கேவின் இந்த தொடர் தோல்விக்கு ஒருவர் மட்டும் காரணம் என்று கூறிவிட முடியாத நிலையே உள்ளது. தொடக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு ஓப்பனிங் இறங்கிய முரளி விஜய், வாட்சன் இருவரும் நன்றாக ஆடவில்லை. அதேபோல கடைசியாக சில போட்டிகளில் டு பிளசிஸ் சரியாக பேட்டிங் செய்யவில்லை.

IPL2021 Dhonis CSK To Take Tough Calls Several Players Could Be Axed

இன்னொரு பக்கம் வாட்சன் எப்போதாவது மட்டுமே அதிரடியாக ஆடினார். ராயுடு அவ்வப்போது அதிரடியாக ஆடினாலும், சில சமயம் டெஸ்ட் இன்னிங்ஸ் போல ஆடினார். ஜாதவ் எல்லாப் போட்டியிலுமே சொதப்பினார். பவுலிங்கில் ஜடேஜா, சாகர், பிராவோ, கரன் சர்மா, சாவ்லா என யாருமே பெரிய அளவில் விக்கெட் டேக்கர்களாக இல்லை. பவுலர்கள் எல்லோருமே சொதப்ப, ஒரு பேட்ஸ்மேனாக ஜடேஜா மட்டுமே கொஞ்சம் நன்றாக ஆடினார். இதெல்லாம் போக இன்னொரு பக்கம் தோனி பேட்டிங் மற்றும் கேப்டன்சியில் தொடர்ந்து சொதப்புவதாக அவர் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

IPL2021 Dhonis CSK To Take Tough Calls Several Players Could Be Axed

அதோடு பயிற்சியாளர் பிளமிங்கும் பெரிய அளவில் மூத்த வீரர்கள் பார்மில் இல்லை எனத் தெரிந்தும் இளம் வீரர்களை தயார் செய்யவில்லை எனவும், மாறாக வீரர்களின் வயதை தொடர்ந்து குற்றஞ்சாட்டிக்கொண்டு ஒரு பயிற்சியாளராக பொறுப்பாக செயல்படவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதன் காரணமாக மொத்தமாக அணியில் அனைவர் மீதும் சிஎஸ்கே நிர்வாகம் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அதனால் மொத்தமாக இவர்களை மாற்ற வேண்டும் என சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

IPL2021 Dhonis CSK To Take Tough Calls Several Players Could Be Axed

அதாவது அணியில் முக்கியமான வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு மீதமிருக்கும் பழைய வீரர்களை நீக்கிவிட்டு புதிதாக இளம் வீரர்களை எடுக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2021ஆம் ஆண்டு தொடருக்கு இப்போதே அணியை உருவாக்கவும், அதற்காக வெளிநாட்டு வீரர்கள், டிஎன்பிஎல் வீரர்களை அணிக்குள் கொண்டு வரவும் சிஎஸ்கே நிர்வாகம் நினைப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஷேன் வாட்சன், பியூஸ் சாவ்லா, கேதார் ஜாதவ், இம்ரான் தாஹிர் போன்றோருக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2021 Dhonis CSK To Take Tough Calls Several Players Could Be Axed | Sports News.