“வெளியான +2 தேர்வு முடிவுகள்!”.. முதல் மூன்று இடத்தை பிடித்து அசத்திய மாவட்டங்கள் இவைதான்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுக்க, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 7,127 பள்ளிகளில் 2120 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகள் 85.94 சதவீதம் பேரும் மெட்ரிக் பள்ளிகளில் 98.70% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக மாற்றத்திறனாளி மாணவர்களில் 2,506 பேர் தேர்ச்சி பெற்றுள்ளன.
இத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடமும், ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடமும் கோவை மூன்றாமிடமும் பெற்றுள்ளன. கடந்த வருடமும் இதே போன்ற இடங்களை இம்மாவட்டங்கள் பிடித்தன. கடலூர் மாவட்டம் 77.74 சதவீதத்துடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது. சிறைக் கைதிகள் 62 பேர் பிளஸ் டூ தேர்வு எழுதிய நிலையில், அவர்களிலும் 50 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தேர்வு முடிவுகளை இணையதளத்தில் தேர்வு முடிவுகளை கைபேசி வாயிலாக குறுஞ்செய்தி மூலம் முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும் 11ம் வகுப்பு மறு தேர்வு முடிவுகளையும் இன்றே அறிந்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள், dge.tn.gov.in, dge.tn.nic.in, examresults.net, http://www.results.nic.in/ என்ற இணையதளங்களில் பார்க்க முடியும். பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.