ஒரே 'செல்ஃபி' வீடியோ.. 'BP.. இதயத் துடிப்பு.. ரத்த ஓட்டம்'.. என ஒரு முழு உடற்பரிசோதனையே பண்ணிடலாம்.. எப்படி?
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Siva Sankar | Aug 12, 2019 07:00 PM
கனடா மற்றும் சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ரத்த அழுத்தத்தை தெரிந்துகொள்வதற்காகவே புதிய செல்ஃபி கேமரா வந்துள்ளது.

ஆகியோர் டிரான்ஸ்டெர்மல் ஆப்டிகல் இமேஜிங் பல்கலைக் கழக உளவியலாளர் காங் லீ மற்றும் ஆய்வாளர் பால் ஜெங் இருவரும்
உருவாக்கியுள்ள இந்தத் தொழில்நுட்பமானது, நமது முகத் தோலில் இருந்து கசியும் ஒளியை ஸ்மார்ட்போன்களில் இருக்கும் ஆப்டிகல் சென்சார்கள் உள்வாங்கி, அதன் மூலம் நம் தோலின் கீழ் பகுதியில் இருக்கும் ஹீமோகுளோபினில் இருகும் சிவப்பு நிற ரத்த ஒளியை படம் படிக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 விநாடி செல்ஃபி வீடியோ எடுப்பதன் மூலம், இதயத் துடிப்பு, மன அழுத்தம் மற்றும் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் 3 வகையான மாற்றங்களை 95 சதவீத துல்லியத்துடன் அளவிட முடியும். தவிர ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு, ஹீமோகுளோபின் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளிட்டவற்றையும் அறியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியை சீனாவில் உள்ள நியூராலஜிக்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
விரைவில் இந்த செயலி டிஹிட்டல் மென்பொருள் சந்தைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
