15 ஆண்டுகளில் 'முதல்முறை'... தோனியை அதிரடியாக 'நீக்கியதற்கு' காரணம் இதுதானாம்... 'கசிந்த' ரகசியம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 17, 2020 01:53 PM

கூல் கேப்டன் என புகழப்படும் தோனி கடந்த உலகக்கோப்பை போட்டிகளுக்குப்பின் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறவில்லை. இதனால் அவர் ஓய்வு முடிவை அறிவிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஜனவரி வரை காத்திருங்கள் என தோனி இதுகுறித்து தெரிவித்து இருந்தார்.

Why no contract for MS Dhoni, now the reason revealed

இதற்கிடையில் பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த போட்டியலில் இருந்து தோனியை சமீபத்தில் நீக்கியது. இது தோனி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு வரையிலான 15 ஆண்டுகளில் தோனியின் பெயர் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறாமல் போனது இதுவே முதன்முறை ஆகும்.

இந்தநிலையில் தோனி நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. அதில் ஒரு வீரர் ஒப்பந்தம் துவங்கும் அக்டோபர் 2019 முதல் தற்போது வரையில் மூன்று டெஸ்ட் போட்டி அல்லது எட்டு ஒருநாள் போட்டிகள் அதுவும் இல்லையென்றால் 3 டி20 போட்டிகளில் கலந்து கொண்டு இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

தோனி ஜூலை 10-ம் தேதி முதல் இந்திய அணியில் இருந்து விலகி இருக்கிறார். எந்தவொரு போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. அதனால் தான் அவர் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார் எனவும், அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்று, இந்திய டி20 அணியில் நுழைய வாய்ப்புள்ளதாகவும் பிசிசிஐ வட்டாரம் கூறியுள்ளது.

மேலும் இதற்குமேல் அணியில் இடம்பெற்று விளையாடுவது தோனி கையில் தான் இருக்கிறது என்றும் இதன் வழியாக பிசிசிஐ தெளிவாக உணர்த்தியுள்ளது. ஆக இதற்குமேல் இந்திய அணியில் இணைந்து விளையாடுவது தோனியின் கைகளில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.