'10-ஆம் வகுப்பு மாணவர் உட்பட மேலும் 105 பேருக்கு கொரோனா!'.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்வு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 19, 2020 06:54 PM

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Corona New Cases update April 19th கொரோனா பாதித்தவர்கள் விபரம்

அதிகபட்சமாக சென்னையில் மேலும் 4 மருத்துவர்கள் உட்பட இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுமுள்ளது.

இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  1372ல் இருந்து 1,477ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் குணமடைந்தோர் எண்ணிக்கை 365லிருந்து 411 ஆக உயர்ந்துள்ளது.