'அரசியல் பிடிக்கல'...ஆனா இப்போ...' தீபா எடுத்திருக்கும் அதிரடி முடிவு'...ஆச்சரியத்தில் தொண்டர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 19, 2019 03:14 PM

அரசியல் பிடிக்கவில்லை எனவே அதிலிருந்து விலகுகிறேன் என தீபா அறிவித்திருந்த நிலையில், அவர் தற்போது எடுத்திருக்கும் முடிவு அவரது தொண்டர்களுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.

Jayalalitha niece J Deepa wants to join AIADMK

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு அவரது அண்ணன் மகள் தீபா கடந்த 2017-ஆம் ஆண்டு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார். இவர் ஜெயலலிதா போல் தோற்றத்தில் இருப்பதால் இவரது கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். ஆனால் நாட்கள் செல்ல, செல்ல  அவருக்கு பெரிதாக மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லததால், அவரால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

கணவருடனான பிரச்சினை, சகோதரனுடனான பிரச்சினை, கட்சி நிர்வாகிகளுடனான பிரச்சினை என, அவரை சுற்றி பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவரது கட்சி நிர்வாகிகளே மற்ற கட்சிகளில் தங்களை இணைத்து கொண்டார்கள். இந்நிலையில் ''தான் இயக்கத்தை கலைப்பதாகவும், அரசியலில் இருந்து விலகுவதாகவும் தீபா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனிடையே அரசியல் தனக்கு வேண்டாம் என கூறிய தீபா, தற்போது அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று வந்த தீபா பேரவையின் தலைமை நிலைய செயலாளர் தொண்டன் சுப்ரமணி “எங்கள் பொது செயலாளர் தீபாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இங்கு வரவில்லை. அதிமுகவில் இணைய விரும்பி கடிதம் வழங்கி உள்ளோம். தலைமைக் கழகம் எங்களை என்று அழைக்கிறதோ அன்று நாங்கள் அனைவரும் எந்த நிபந்தனையின்றி இணைய உள்ளோம்'' என கூறியுள்ளார்.

மேலும் அமைச்சர் ஜெயக்குமார், தீபா அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம் என கூறியிருந்தார். அதன் அடிப்படையில் இன்று இந்த கடித்தை கொடுத்துளோம். அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது தொடர்பாக சந்தித்து பேச உள்ளோம்” என்று தெரிவித்தார். தீபாவின் இந்த திடீர் முடிவு அவரது தொண்டர்களிடையே வியப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : #J DEEPA #DJAYAKUMAR #AIADMK #JJAYALALITHAA #MGR AMMA DEEPA FEDERATION