'இந்திய அணி மட்டும்'.. இத பண்ணுச்சுனா... 'அசத்தலான' ஆஃபரை அறிவித்த ஆட்டோ டிரைவர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jul 10, 2019 06:23 PM

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா முழுவதும் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள், பணியைச் சேர்ந்தவர்கள் என சகலவிதமானவர்களும் கவனம் செலுத்தி ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

Auto Driver announces free rides if india wins in CW

தீவிரமான ரசிகர்கள் பலரும் தாங்கள் செய்யும் தொழில்களில் உலகக் கோப்பை திருவிழாவை கொண்டாடும் விதமாக, சிறப்பான எதையாவது ஒன்றை உள்வைத்து செய்து தங்களைப் போன்ற கிரிக்கெட் ரசிகர்களைக் கவருவதுண்டு. இதன் மூலம் தானும் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பதை அவர்கள் வெளிப்படுத்துவர்.

அப்படித்தான் சண்டிகரில், அனில்குமார் என்கிற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தீவிர கிரிக்கெட் ரசிகராக இருப்பதால் கோலியின் தலைமையிலான இந்திய அணி, உலகக் கோப்பை போட்டியில் மோதுவதை நினைவுபடுத்தும் படத்தை தனது ஆட்டோவில் ஒட்டியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாது, இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றால், 50 சவாரிகளுக்கு இலவசமாக ஆட்டோ ஓட்டவிருப்பதாகவும், அவர் அதிரடியான சலுகை ஒன்றை அறிவித்துள்ளார். இந்த சலுகையை அறிவித்ததன் மூலம் பிரபலமாகியிருக்கும் அனில் குமார், தன் நாட்டுக்காக இதைச் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.