‘ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் இதெல்லாமா இருக்கும் வயிற்றில்..’ பிரசவத்தின்போது பெண்ணிற்கு நடந்த கொடுமை..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jun 10, 2019 12:31 PM

ஒசூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது பெண்ணிற்கு வயிற்றில் துணியை வைத்து தைத்ததாக பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Hospital left cloth in womans stomach during operation in Hosur

ஒசூரைச் சேர்ந்த கவிதா என்பவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்குப் பிறகு கவிதாவுக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்துள்ளது. அதற்காக ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது வயிற்றில் மருத்துவர்கள் பயன்படுத்தும் முக கவசம் ஒன்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த கவிதா மற்றும் அவருடைய உறவினர்கள் ஒசூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட்டதால் போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

கவிதா உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பிரசவத்தின்போது பெண்ணிற்கு நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #DELIVERY #OPERATION #HOSUR