KKR VS PBKS : ஒரே ஓவரில் BEAST மோடில் ரஸ்ஸல் காட்டிய அதிரடி.. நொறுங்கிப்போன ஓடியன் ஸ்மித்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் ரஸ்ஸல் காட்டிய அதிரடியால் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றிருக்கிறது.
ஐபிஎல் 2022
உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த வாரம் துவங்கியது. கொரோனா காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 3 மைதானங்களில் மட்டுமே நடைபெறும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
KKR vs PBKS
நேற்று நடந்த ஐபிஎல் 15ஆவது சீசனின் 8ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் ஒரு ரன் மட்டும் எடுத்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார். ஆனால் அதன்பிறகு தவன், பனுகா ராஜபக்ஷா ஜோடி இணைந்து ரன்னை உயர்த்தியது. ஷிவம் மாவி வீடிய ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அசத்தினார் பனுகா. ஆனால், அடுத்த பந்திலேயே அவரும் அவுட்டாக அடுத்துவந்த பேட்ஸ்மேன் யாரும் சோபிக்காததால் பஞ்சாப் அனி 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையம் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தாவின் உமேஷ் யாதவ் 4/23 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
சேஸிங்
இதனை அடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா அணி. வெங்கடேஷ் ஐயர் 3 ரன்னில் வெளியேற ரஹானே 12 ரன்னுடன் பெவிலியன் திரும்பினார். களத்திற்கு வந்த ஷ்ரேயாஸ் அய்யர் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால் ராகுல் சஹார் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவர் வீடிய 7 வது ஓவரில் ஷ்ரேயாஸ் மற்றும் ராணா ஆகிய இருவரும் அவுட்டாக மேட்ச் பரபரப்பாக மாறியது.
பீஸ்ட் மோட்
இதனை தொடர்ந்து சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரஸல் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட ஆரம்பித்தார்கள். அப்போது 10 வது ஓவரை வீசவந்தார் ஹர்பிரித் ப்ரார். அந்த ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார் ரஸ்ஸல். ஓடியன் ஸ்மித் வீசிய 12 வது ஓவரில் 4 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி எனா ரசிகர்களை திகைக்க வைத்தார் ரஸ்ஸல். ஸ்மித் வீசிய ஓவரில் 30 ரன்கள் வர கொல்கத்தாவின் வெற்றியை உறுதியாக்கினார் ரஸ்ஸல்.
அடுத்து அர்ஷ்தீப் ஓவரிலும் ரஸ்ஸல் தனது அதிரடியை தொடர்ந்தார். இதன் காரணமாக கொல்கத்தா அணி 14.5 ஆவது ஓவரிலேயே 141/4 ரன்கள் சேர்த்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றபெற்றது. ரஸ்ஸல் 31 பந்துகளில் 8 சிக்ஸர்கள் உட்பட 70 ரன்களை குவித்து அசத்தினார்.
4 விக்கெட்டுகளை வீழ்த்திய உமேஷ் யாதவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.