'ஒரு கல்லை மட்டும் ரோட்டுக்கு நடுவுல வச்சிடுவாரு...' 'அடுத்தது எல்லாமே அவர் போட்ட திட்டப்படியே நடக்கும்...' - கடைசியில 'அத' எடுத்திட்டு எஸ்கேப் ஆயிடுவாரு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள அய்யலூர் மேம்பாலத்தை தான் பெரும்பாலான மக்கள் வண்டிகள் ஊர் விட்டு ஊர் செல்ல பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வடமதுரை மேற்கு ரத வீதியை சேர்ந்த குமரேசன், தன் திருமண மண்டபத்தில் வேலை செய்யும் அய்யலூரை சேர்ந்த சரஸ்வதி என்பவரை நேற்றிரவு வீட்டில் விடுவதற்காக குமரேசன் தன் இருசக்கர வாகனத்தில் அய்யலூர் பாலம் வழியே சென்றுள்ளார்.

அப்போது மேம்பாலத்தின் நடுவில் இருந்த பெரிய கல்லின் மீது பைக் ஏறியதில், நிலை தடுமாறிய சரஸ்வதி கீழே விழுந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த குமரேசன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு சரஸ்வதிக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தார்.
அந்நேரத்தில், திடீரென்று மறைவிடத்திலிருந்து வந்த மர்ம நபர் ஒருவர் குமரேசனின் பைக்கை திருடிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். என்ன செய்வதென்று அறியாத குமரேசன் பதறி காயமடைந்து கிடக்கும் சரஸ்வதியை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.
அதன்பிறகு, தன் மோட்டார் சைக்கிள் காணாமல் போனது குறித்து வடமதுரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றவனை தேடி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில், அய்யலூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கம்பளி வியாபாரம் செய்து வந்த வடமாநில வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. ராஜஸ்தான் மாநிலம், ஜலாவார் மாவட்டம், பச்பகார் என்ற இடத்தை சேர்ந்த 23 வயதான கெலாஷ் என்பவர் தான், குமரேசனின் பைக்கை திருடியதும், இதேபோல் அடிக்கடி பாலத்தில் பயணிப்பவர்களிடம் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் திருடிய பைக்கிலேயே அதே பகுதியில் கம்பளி வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது.
இந்நிலையில், கெலாஷை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மற்ற செய்திகள்
