‘ஹெல்மெட் இல்லாம தான் வருவாங்க!’.. ‘இப்ப தலையே இல்லாம வர்றாங்களே!’.. உறைந்து நின்ற போலீஸார்... சென்னை சிட்டியை கதிகலங்க வைத்த மர்ம மனிதர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 17, 2020 12:49 PM

தாம்பரம் பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவ்வழியாக தலையில்லாமல் தொப்பி மற்றும் கூலிங்கிளாஸ் அந்தரத்தில் இருக்குமாறு பார்ப்பதற்கு காட்சி அளிக்கும் நிலையில் மர்ம மனிதன் ஒருவர் கோட் சூட் அணிந்த படி அவென்ஜர் மோட்டார் பைக்கில் வந்தார்.

Headless man found driving Bike in chennai for thanking public service

வழக்கமாக இருசக்கர வாகன ஓட்டிகள் தலையில் ஹெல்மெட் இல்லாமல் வருவதையே பார்த்து பார்த்து பழகிய டிராபிக் போலீஸாருக்கு, இப்படி ஒரு தலையே இல்லாமல் ஒருவர் பைக்கில் வருவது சற்றே அதிர்ச்சி அளித்ததும் உறைந்து போய் நின்றுவிட்டார்.  போலீஸாரின் அருகில் வந்து நின்ற அந்த நபர், இந்த கொரோனா சமயத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், காவல்துறையினர் , சுகாதாரத் துறையினர் மற்றும் ஊடகத் துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இப்படி வந்ததாக கூறிய அந்த நபர், மேடை கலைஞர் மதன் குமார் என்பவர் என்றும், இந்த விழிப்புணர்வுக்காக இப்படி வித்தியாசமான உடையணிந்து வலம் வருவதாக கூறியும் போலீஸ்காரர் கையில் ரோஜா பூக்களை கொடுத்தார்.

இதேபோல மற்றொரு இடத்தில் நின்ற, அவரை சட்டென கண்டுவிட்ட மக்கள் சற்று பீதி அடைந்துவிட்டனர். அதிலும் சிலர் அருகில் வந்து அந்த தலையில்லா தோற்றத்தில் இருந்த மர்ம மனிதருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். அங்கும் போக்குவரத்து போலீஸாரரிடம் ரோஜா பூக்களைக் கொடுத்து தியாகராய நகரை நோக்கி பயணித்தார் மதன்குமார். அவரது வாகனத்தின் முன்பகுதியில் இந்த விபரங்கள் எழுதி ஒட்டப்பட்டிருக்கின்றனர். 

சேவை செய்பவர்களுக்கு நன்றி தெரிவிப்பது எல்லாம் சரிதான், நம்மூர் ரோட்டில் சரியாக வாகனத்தில் சென்றாலே எதிர்பாராத விபத்துகள் நிகழும் நிலையில், இப்படி கண்களை மறைத்தாற்போல் ஆடையணிந்து, அருகில் இருப்பவர்கள் பீதியடையும் வகையில் தலையில்லாமல் இருப்பது போன்ற வேடத்துடன் பைக்கில் செல்வதெல்லாம் விபத்துக்கு காரணமாகிவிடும் என பலரும் அவரை எச்சரித்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Headless man found driving Bike in chennai for thanking public service | Tamil Nadu News.