'அப்படி என்ன தங்கத்துலயா பஞ்சர் போடறீங்க...' ஒரு பஞ்சர் போட இவ்ளோ விலையா...! - ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுனே செல்லும் தலேகான் பகுதியில் பஞ்சரான பைக்கின் டயருக்கு பஞ்சர் போட சுமார் 9,500 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக புகார் அளித்துள்ளார் தானேவை சேர்ந்த இளைஞர்.

தானேவை சேர்ந்த 25 வயதான சிராக் நிம்பிரே என்னும் இளைஞர் புனேவில் இருக்கும் தன் நண்பர்கள் மற்றும் பெற்றோரைக் காண பைக்கில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் புனேவை அடையும் வழியில் தலேகான் பகுதியை கடக்கும் போது அவரின் பைக் பஞ்சர் ஆகியுள்ளது.
இந்நிலையில் அங்கிருக்கும் மெக்கானிக் கடையை அணுகி பஞ்சர் போட கேட்டபோது, அவர் சொன்ன விலை சிராக்கிற்கு தலை சுற்ற வைத்துள்ளது. பைக்கின் டயருக்கு சாதாரண பஞ்சர் போட சுமார் ரூ.9500 கேட்டுள்ளார் அங்கிருந்த மெக்கானிக்.
இதுகுறித்து கூறிய சிராக் நிம்பிரே, 'நான் புனேவுக்கு அருகில் செல்லும்போது, என் வாகனத்தில் ஏதோ தவறு இருப்பதாக நான் உணர்ந்தேன். இந்த நேரத்தில், நான் தலேகானில் ஒரு சிறிய கேரேஜ் அமைப்பைக் கண்டேன், அங்கு சென்று என் வண்டியை சரிசெய்து கொள்ளலாம் என நினைத்தால் அங்கு இருந்த மெக்கானிக் பைக் டயர் மாற்ற சுமார் 8,500 ரூபாய் என கூறினார்கள்.
அவரை சமாதானப்படுத்தி, நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அவர் இறுதியாக ரூ .6,500 எடுக்க ஒப்புக்கொண்டார். ஆனால் டயரை சரிசெய்த பிறகு என்னுடைய பைக்கில் சுமார் 60 பஞ்சர்கள் இருப்பதாகக் கூறி மீண்டும் அவர் என்னிடம் 9,500 ரூபாய் செலுத்தும்படி கேட்டார்.
ஆனால் என்னிடம் அவ்வளவு பணம் இல்லாததால் ரூ.6500 மட்டும் செலுத்தமுடியும் என கூறினேன்' எனக்கூறியுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தலேகான் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நிலேஷ் போக்போட் கூறுகையில், 'இதுபோன்ற சம்பவம் நடப்பதாக இதுவரை எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை. இருப்பினும் தற்போது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது, மேலும் அப்பகுதியில் இருக்கும் போக்குவரத்து காவல்துறையினருக்கு இதுகுறித்து அறிவித்து, விலைகளை ஒழுங்குபடுத்துமாறு கூறியுள்ளோம். இதுபோன்ற அநியாய கொள்ளை சம்பவங்கள் நடக்கும் போது மக்கள் வர வேண்டும் முன்னோக்கி இந்த விஷயங்களைப் பற்றி புகார் செய்ய வேண்டும்' எனக்கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
