சென்னை மக்களுக்கு ‘தித்திப்பான’ செய்தி.. மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட ‘அசத்தல்’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மெட்ரோ நிர்வாகம் புதிய அறிவிப்பு ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் மக்கள் அதிகமாக பயணிக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பாதி டிக்கெட் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதேபோல் சமீபத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக QR டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் சென்னை மெட்ரோ நிலையங்களில் இருசக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் கிடையாது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘அனைத்து சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மிதிவண்டி, மின்விசை இயக்க ஊர்திகள் மற்றும் இரு வேறுபட்ட மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்களை கட்டணமின்றி நிறுத்திக் கொள்ளலாம்’ என குறிப்பிட்டுள்ளது.
No parking charges for Bi-cycle, Electric Bike & Hybrid - Vehicle at all Chennai Metro Stations pic.twitter.com/gKEj1zw55j
— Chennai Metro Rail (@cmrlofficial) December 21, 2020

மற்ற செய்திகள்
