என்னடா இது...! 'டயர் நகரவே மாட்டேங்குது...' 'கார் மூவ் ஆகல...' மலைல இருந்து நடுரோட்டுக்கு எப்படி வந்துச்சு...! -போய் பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் சாலையில் நேற்று (21-09-2020) காலை பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது சோமையா மைதான் பகுதியில் இருந்து 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று வந்தது. இது சாலையில் நின்று கொண்டிருந்த காருக்கு அடியில் சென்றது.

பின்னர் காரின் சக்கரத்தில் நன்றாக சுற்றிக் கொண்டது. பின்னர் காரை எடுக்க முயன்ற ஓட்டுநரால் காரை கொஞ்சமும் நகர்த்த முடியவில்லை. சக்கரத்தில் ஏதோ பிரச்சினை இருப்பதை உணர்ந்தார். உடனே காரை அப்படியே சாலையில் நிறுத்திவிட்டார்.
இதனால் காருக்கு பின்னால் வந்த வாகனங்கள் அனைத்தும் அப்படியே நடுரோட்டில் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து காருக்கு அடியில் என்ன உள்ளது என்று பார்க்கையில் மலைப்பாம்பு ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், உடனே அப்பகுதியில் இருந்த மும்பை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து பாம்பு பிடிக்கும் நபர்கள் வரவழைக்கப்பட்டனர். இதன் பின்னர் அபிருப் காடம், சித்தார்த் கெய்க்வாட், சுனில் காடம் ஆகிய பாம்பு பிடிப்பதில் அனுபவம் கொண்ட நபர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் நெடு நேரமாக போராடி பாம்பை மீட்டனர். இதனை ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று பார்வையிட்டனர். அந்த பாம்பை பத்திரமாக எடுத்துச் சென்று அருகிலுள்ள வனப்பகுதியில் விட்டனர்.
இந்த நிலையில் காருக்கு அடியில் நுழைந்து கொண்ட மலைப்பாம்பு தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

மற்ற செய்திகள்
