“என்ன கொஞ்சம் பாருங்க தல?”.. வீடியோ கேம் விளையாடும் தோனியின் கவனத்தை ஈர்க்க சாக்‌ஷி செய்த சேட்டை! தீயாய் பரவும் ஃபோட்டோஸ்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Apr 20, 2020 11:53 PM

இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா நியூஸிலாந்திடம் அரையிறுதியில் தோற்று வெளியேறிய பிறகு, தோனி கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்காமல் இருந்தார்.

Sakshi did this to get Dhonis attention who is busy with playing video

ஒருவேளை ஐபிஎல் போட்டிகள் நடந்திருந்தால் அவர் களத்தில் இறங்கியிருப்பார் என்றிருந்த சூழலில், கொரோனா வைரசும் லாக்டவுனும் வந்துவிட்டதால், அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் வீரர் தல தோனி, தன் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்துக்கொண்டு வருகிறார். ஆனாலும் வீடியோ கேமில் தோனி மும்முரமாக இருந்ததை அடுத்து, அவரது பாத விரலை கடிப்பது போல் பாவனை செய்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளா அவரது மனைவி சாக்‌ஷி தோனி.

மேலும் அந்த புகைப்படத்திற்கு, “#mrsweeti-யிடமிருந்து கவனத்தை ஈர்க்கும் போது! வீடியோ கேம் vs மனைவி” என்று சாக்‌ஷி தலைப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப கட்டத்தில் இன்ஸ்டாகிராமிற்காக தோனியை வீடியோ எடுத்த சாக்‌ஷியை,  “உன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸை அதிகப்படுத்த வீடியோ எடுக்கிறாயா?” என்று கிண்டல் அடித்தார். ஆனால் அப்போது அந்த வீடியோவில் “நானும் உன் அங்கம்தானே பேபி” என்று சாக்‌ஷி தோனியை பார்த்து கூறியதால், ஏகோபித்த ரசிகர்களின் ஆதரவை சாக்‌ஷி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.