உயிருக்கு போராடிய மனைவி.. சென்னையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. கலங்கி போன பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Feb 27, 2023 09:18 PM

கிரிக்கெட் அரங்கில் மிக சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம். இவர் கிரிக்கெட் போட்டி விளையாடிய காலத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை தனது வேகப்பந்துகளால் பலமுறை தடுமாறவும் வைத்துள்ளார். தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டு உலக கோப்பைத் தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வையும் அறிவித்திருந்தார்.

Wasim Akram about his wife health condition in chennai

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஸ்டாலின் எனும் பெயருக்கு பின்னால் இவ்ளோ பிரச்சனை வந்துச்சா?.. ஆனாலும் கலைஞர் சொன்ன அதிரடி பதில்..!

அப்படி இருக்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இதயம் மற்றும் சிறுநீரகங்களில் ஏற்பட்ட கோளாறினால் உயிரிழந்த தனது மனைவி ஹூமா குறித்து தற்போது வாசிம் அக்ரம் பேசியுள்ள விஷயங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது

வாசிம் அக்ரமின் மனைவியான ஹூமா, தன்னுடைய 42 வது வயதில் சென்னையில் வைத்து காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தனது மறைந்த மனைவி குறித்த சில உணர்ச்சிகரமான கருத்துக்களை வாசிம் அக்ரம் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.

Wasim Akram about his wife health condition in chennai

Images are subject to © copyright to their respective owners.

"நான் எனது மனைவியுடன் சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது எரிபொருள் நிரப்புவதற்காக சென்னையில் விமானம் நிறுத்தப்பட்டு இருந்தது. விமானம் தரையிறங்கிய சமயத்தில் எனது மனைவி மயக்கம் அடைந்து விட்டதால் நான் அழுது கொண்டே இருந்தேன். அந்த சமயத்தில் அங்கே இருந்த மக்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள். மேலும் எங்களிடம் இந்தியா விசா இல்லை, நாங்கள் இருவரும் பாகிஸ்தான் பாஸ்போர்ட் தான் வைத்திருந்தோம்.

Wasim Akram about his wife health condition in chennai

Images are subject to © copyright to their respective owners.

ஆனால் சென்னை விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகள் விசாவைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் உங்கள் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்றும் கூறினார்கள். அது என்னால் மறக்க முடியாத ஒன்று. கிரிக்கெட் வீரர் என்பதைவிட ஒரு மனிதனாக என்னால் மறக்க முடியாத விஷயம் அது தான்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாசிம் அக்ரம் மனைவி, உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து பின்னர் மரணம் அடைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read | உதயநிதியா? செந்தாமரையா?.. யாரு செல்லப்பிள்ளை..😍 முதல்வர் MK ஸ்டாலின் அசத்தல் பதில்.. Exclusive

Tags : #WASIM AKRAM #WASIM AKRAM ABOUT HIS WIFE HEALTH CONDITION

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Wasim Akram about his wife health condition in chennai | Sports News.