"ஹனிமூன் ட்ரிப்புக்கு கூட 8 நண்பர்களா..?".. காரணத்தை உடைத்த கணவர்..! NEEYA NAANA வைரல் COUPLE ஜாலி பேட்டி..
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் மனைவிமார் தரப்பினர் கணவரின் நட்பு வட்டம் தங்களுக்கு தொல்லையாக இருப்பதாக பேசினர்.

Also Read | “நான் நடிச்சது நிஜ கேரக்டர்..! கைதாகி வெளிய வந்துட்டாங்க.. அவங்க பேர் கூட ..”.. BAKASURAN லயா EXCLUSIVE
அதில் பெண் ஒருவர் தன் கணவர் தன்னுடன் நேரம் செலவிடுவதில்லை என்றும் எப்போது அவுட்டிங், டின்னர் சென்றாலும் நண்பர்களுடன் செல்கிறார், அல்லது நாங்கள் போகும்போது நண்பர்களும் வந்துவிடுகின்றனர் என கோபிநாத்திடம் ஜாலியாக புகார் அளித்ததுடன், இத்தனைக்கும் ஹனிமூன் டிரிப் போகும்போது கூட நண்பர்கள் உடன் வந்தனர். நான் அவரிடம் தனியே பேச நினைத்தேன். இதெல்லாம் செய்ய முடியாமல் போனது என பொசசிவாக சொல்கிறார்.
இதுகுறித்து அவரது கணவரிடம் கோபிநாத் விசாரிக்கும்போது, அவரோ, “நீண்ட நேரம் பேசவும் முடியாது, அவங்களுக்கும் போர் அடிக்கும். பொதுவாக ஆபீஸ் கெட் டுகதரில் நண்பர்களுடன் செல்வேன். அதேபோல் வெளியூர், டின்னர், அவுட்டிங் செல்லும்போது நண்பர்களுடன் சென்று பழகிவிட்டேன், அது பேச்சிலராக இருந்து வந்ததால் திடீரென குடும்ப வாழ்க்கை பொறுப்புகளை எதிர்கொள்வதால் இப்படியா என தெரியவில்லை. நான் சில வேளைகளில் அவரை தனியே அழைத்துச் சென்றுள்ளேன், இருப்பினும் நண்பர்களும் உடன் வரும்பொழுது இன்னும் கொஞ்சம் போரடிக்காமல் அந்த பயணங்கள் ஜாலியாக மாறும் என்பதால் தான்” என கூறினார்.
இருவரின் பதில்களையும் பார்த்த பின்பு கோபிநாத் அந்த இளைஞரிடம், “புரிகிறது. ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் ஜாலியாக இருக்க வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்க்க கூடாது. குடும்ப வாழ்க்கை அனைத்தும் உணர்வுகளுக்குமானது. நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். போரடித்தாலும் அவர்களின் முகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு, குழந்தைகளுடனும் வீட்டிலும் நேரம் செலவிட்டு அதிலேயே மகிழ்ச்சியுடன் இருப்பது எப்படி என கற்க வேண்டும். உங்கள் மனைவி தன் மனதில் இருப்பதையே இங்கு வெளிப்படுத்துகிறார்.!” என நெகிழ்ச்சியுடன் அட்வைஸ் செய்தார்.
இந்த நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்த இந்த வைரல் தம்பதியினர், (அரவிந்த் - சாய் பாரதி)பல்வேறு சுவாரசியமான மற்றும் ஜாலியான விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றனர்.
குறிப்பாக, 8 நண்பர்களுடன் ஹனிமூன் சென்றதற்கான காரணத்தை அரவிந்த், சொல்லும் பொழுது, “என் நண்பன் ஒருவன் ஹனிமூனுக்கு அந்தமான் சென்று இருந்தான். அப்போது மூன்றாவதாக புகைப்படம் எடுக்க கூட ஓர் ஆளில்லை. வெகு நேரம் அமைதியாக இருக்க வேண்டியது இருக்கும்.
ஒரு கட்டத்தில் போர் அடித்தால் பேச முடியாது. சண்டை வந்துவிடும். சமாதானம் பண்ண வேண்டும். இப்படித்தான் ஹனிமூன் நாட்கள் சென்றது என்று எனக்கு அறிவுறுத்தி இருந்தான். எனவே நண்பர்களுடன் அவுட்டிங் சென்று விட்டால் ஜாலியாக இருந்து விடலாம் என்பது தான் நான் யோசித்தது.” என கூறியுள்ளார்.
Also Read | இதுவல்லவோ சம்பவம்.. LEO பட Shooting-ல் இணையும் பிரபல இயக்குநர் நடிகர்,..

மற்ற செய்திகள்
