“மொத்த வாழ்க்கையும் 44 நாள்ல...” - அனைத்து விதமான போட்டிகளிலும் ஆடும் நடராஜன் பற்றி முன்னாள் வீரரின் 'வைரல்' பேட்டி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Behindwoods News Bureau | Jan 17, 2021 08:38 PM

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் நெட் பவுலராகச் சென்ற, தமிழக வேகப்பந்து வீரர் டி.நடராஜன் 20 ஓவர், ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி என அனைத்து விதமான ஃபார்மெட்களிலும் அறிமுகமாகினார்.

Nattu life direction changed in last 44 days,\' Ajay Jadeja

இதன்மூலம் ஒரே சுற்றுப்பயணத்தில் இப்படி 3 வடிவிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்கிற சாதனையை நடராஜன் படைத்துள்ளார். இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியாவில் சென்று விளையாடிக் கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் முறையாக அறிமுகமான நடராஜன், எடுத்த எடுப்பிலேயே 2 விக்கெட் கைப்பற்றினார். அதன்பிறகு மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் மொத்தம் 6 விக்கெட் வீழ்த்திய நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேனில் நடக்கும் கடைசி டெஸ்டில் இடம்பெற்றார்.

அந்த டெஸ்டிலும் நடராஜன் அறிமுகமாகினார். முன்னதாக பும்ரா காயம் அடைந்ததை அடுத்து, நடராஜனுக்கு இந்த டெஸ்டில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அவரும் இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார். இந்நிலையில் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா நடராஜனை பாராட்டி உள்ளார். அதில், “நடராஜன் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர், கடந்த 44 நாட்களில் அவரது வாழ்க்கையின் திசையே மாறிப் போகியுள்ளது. எனினும் ஆஸ்திரேலிய பயணத்தில் 20 ஓவர் போட்டி அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

Nattu life direction changed in last 44 days,' Ajay Jadeja

இதேபோல வருண் சக்கரவர்த்தி காயம் அடைந்ததாலும் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ரன்களை விட்டுக்கொடுத்தாலும், கடைசி ஒருநாள் போட்டியில் நடராஜன் 2 விக்கெட் கைப்பற்றினார்.

ALSO READ: 'எங்கிருந்துப்பா இப்படிலாம் ஐடியா பண்றீங்க?'.. திருமணத்தன்று ‘மணமக்களுக்கு’ குவியும் பாராட்டுக்கள்!.. ‘அப்படி என்ன செஞ்சாங்க?’

20 ஓவர் போட்டியில் தனது பந்துவீச்சில் கவனிக்க வைத்த நடராஜன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். டெஸ்ட் போட்டியிலும் அபாரமாகவே பந்துவீசி வருகிறார்” என அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nattu life direction changed in last 44 days,' Ajay Jadeja | Tamil Nadu News.