'சீனியர் வீரர்கள் விக்கெட்டை’... ‘15 நிமிடங்களில் வீழ்த்தி’... ‘இந்திய அணியை மிரள வைக்கும் நடராஜன்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணி தற்போது மேற்கொண்டு வரும் வலைபயிற்சியில் தமிழக வீரர் நடராஜன் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் மிக மோசமாக ஆடி இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
முதல் போட்டிக்கு முன் நடந்த வலைப்பயிற்சியில் நடராஜன் மூன்று விக்கெட்டுகளை அரை மணி நேரத்தில் எடுத்தார். ரஹானே, புஜாரா, கோலியின் விக்கெட்டை அடுத்தடுத்து நடராஜன் எடுத்தார். நடராஜன் விக்கெட் எடுத்த விதம் முன்பே பெரிய அளவில் பாராட்டப்பட்டது.
நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பும் நடராஜன் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். வலைப்பயிற்சியில் நடராஜன் தொடர்ந்து யார்க்கர், பவுன்சர், ஸ்லோ பால் என்று மாறி மாறி பந்துகளை வீசி உள்ளார். இன்று நடந்த வலைப்பயிற்சியில் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரின் விக்கெட்டை நடராஜன் எடுத்துள்ளார்.
மிக துல்லியமான லென்தில் பவுலிங் செய்து அசத்தி உள்ளார். இவர் பவுலிங் செய்ய தொடங்கி வெறும் 15 நிமிடங்களில் புஜாரா மற்றும் ரஹானேவின் விக்கெட்டுகளையே எடுத்து இருக்கிறார். சொல்லிவைத்தது போல கடந்த முறை பயிற்சியின் போது எப்படி விக்கெட் எடுத்தாரா, அதேபோல் இன்றும் விக்கெட் எடுத்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் நடராஜன் இல்லை. ஆனாலும் வலைப்பயிற்சியில் நடராஜன் சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறார். இவரின் பவுலிங்கை இந்திய தேர்வுக்குழு தீவிரமாக கவனித்து வருவதால், டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

மற்ற செய்திகள்
