ஓடாம 'ரன்' எடுத்தோம் ... 'சும்மா'வே உக்காந்து 'வின்' எடுத்தோம் ... முதன் முறையாக இந்திய மகளிர் அணி செய்த சாதனை !

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 05, 2020 04:20 PM

பெண்கள் உலக கோப்பை டி 20 போட்டி தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவிருந்த அரையிறுதி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டதால் புள்ளிகளின் அடிப்படையில் இந்திய பெண்கள் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Women\'s T 20 world cup semifinals cancelled due to rain

பெண்கள் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. சிட்னி மைதானத்தில், முதலாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதுவதாக இருந்தது.

இந்நிலையில் மழை தொடர்ந்து பெய்து வந்ததால் டாஸ் கூட போடாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் புள்ளிகள் அடிப்படையில் 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பெண்கள் டி 20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டிக்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இருபது ஓவரில் ஆஸ்திரேலியா அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் குவித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 13 ஓவர்களில் 98 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Tags : #IND VS ENG #WORLD CUP #SHAFALI VERMA