புனே நெடுஞ்சாலை விபத்தை தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திய ஒடிசா ரயில் விபத்து.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > இந்தியாபுனே - பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரபல நாவலே பாலத்தில் ஏற்பட்ட விபத்து சமீபத்தில் பெரிய அளவில் அதிரவலைகளை உண்டு பண்ணி இருந்தது.
இந்த விபத்தில் சுமார் 48 வாகனங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், இந்த விபத்தால், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானபடி ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி பெரும் பதற்றத்தையும் உண்டு பண்ணி இருந்தது.
அப்படி ஒரு சூழலில் தற்போது புனே பகுதியில் நடந்த மற்றும் ஒரு விபத்து, இந்திய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிஷா மாநிலம், ஜாஜ்பூர் பகுதியில் அமைந்துள்ள கோரே என்னும் ரெயில் நிலையத்தில் காலை வேளையில் சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. பொதுவாக, ரெயில் நிலையங்களில் சரக்கு ரெயில்கள் வரும் போது மிக மெதுவாகவே அவை இயக்கப்படும் என தெரிகிறது. ஆனால் இந்த சரக்கு ரெயில் மிகவும் வேகமாக சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனால், ரயில் நிலையத்திற்குள் எதிர்பாராத விதமாக அந்த சரக்கு ரெயில் திடீரென தடம் புரண்டுள்ளது. மேலும், ரயில் நிலைய தண்டவாளத்தை நொறுக்கிய படி சரக்கு பெட்டிகள் கவிழ்ந்ததுடன் அங்கிருந்த ஏராளமான பயணிகளையும் இந்த சம்பவம் அதிர்ச்சியில் உறைய செய்திருந்தது. சரக்கு ரெயில் தடம் புரண்டதால் அங்கிருந்த பயணிகள் பலரும் ஓட்டம் பிடித்த நிலையில், சிலர் ரெயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர் என்றும் தகவல்கள் வெளியானது.
இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ரெயில்வே மீட்புக் குழுவினர் வந்து சேர்ந்தனர். அவர்கள் பெட்டிகளை விரைவாக அகற்றி சிக்கிக் கொண்ட நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தின் காரணமாக, 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இதில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
சரக்கு ரெயில் தடம் புரண்டதன் காரணமாக கோரே ரெயில் நிலைய பகுதிகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. மேலும் இந்த விபத்தின் காரணமாக அந்த வழியாக செல்ல இருந்த ரெயில்கள் மாற்றுப் பாதையிலும் இயக்கப்பட்டன.