RRR Others USA

"இதுவல்லவோ மாமியார் - மருமகள்".. நோட் பண்ணுங்கப்பா.. நெகிழ வைக்கும் வீடியோ..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Mar 23, 2022 07:25 PM

பொதுவாக இன்றைய காலகட்டத்தில், சமூக வலைத்தள பக்கங்களில், சிறுசு தொடங்கி பெருசு வரை என அனைவரும் தங்களின் நேரத்தை கழித்து வருகின்றனர்.

mother in law love to her daughter in law melt hearts

"அப்படி எல்லாம் இருக்க வேணாம்.." ராகுலுக்கு அட்வைஸ் பண்ற கேப்'ல.. தோனியை சீண்டினாரா கம்பீர்??.. என்னங்க சொன்னாரு?

அப்படி நாம் நேரத்தினை செலவிடும் போது, காண கிடைக்கும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், அன்றைய தினத்தில் ட்ரெண்டிங்கில் ஒன்றாக கூட இருக்கும்.

நாளுக்கு நாள் புதிய புதிய வீடியோக்கள், அதிகம் வைரலாகி, பேசு பொருளாகவும் மாற வாய்ப்புள்ளது.

இவற்றுள் சில வீடியோக்கள், தவறான வழிகளில் இருந்தாலும், பெரும்பாலான வீடியோக்கள், மனதைக் கவரும் வகையில் தான் அமைந்திருக்கும். அந்த வகையில், தன்னுடைய மருமகளை மகள் போல பாவித்து, மாமியார் கொஞ்சும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

mother in law love to her daughter in law melt hearts

மாமியார் - மருமகள்

பொதுவாக, மாமியார் - மருமகள் என்றாலே, சண்டை போடுவதாக தான் வெளியே ஒரு கருத்து உள்ளது. ஆனால், இந்த வீடியோவில் வரும் மாமியார் - மருமகளோ, அப்படியே வேறு பக்கம். ஊருக்கு கிளம்பும் மாமியார் ஒருவர், தனது கர்ப்பிணி மருமகள் அருகே வந்து உட்கார்ந்து, பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது, மருமகளிடம், உனக்கு ஏதாவது ஒன்று என்றால், நான் மறுநாளே ஓடி வந்து விடுவேன் என கூறுகிறார்.

பத்திரமா இருக்கணும்

பத்திரமாக இருக்க வேண்டும் என கூறி, மருமகளுக்கு முத்தம் ஒன்றையும் கொடுக்கிறார் அந்த மாமியார். மேலும், கர்ப்பமாக இருக்கும் மருமகள், எப்படி எல்லாம் இருக்க வேண்டுமெனவும் மாமியார் அறிவுறுத்துகிறார். இதன் பிறகு, கடைசியில் கிளம்பும் நேரத்திலும் மருமகளின் பாதுகாப்பினை தான் மாமியார் மீண்டும் மீண்டும் உறுதி செய்து கொண்டிருக்கிறார்.

mother in law love to her daughter in law melt hearts

கடைசியில், கோவிலுக்கு சென்று விட்டு ஒரே நாளில் ஓடி வந்து விடுவேன் என்றும் சொல்கிறார். அப்படி மாமியார் - மருமகள் அன்பாக பேசும் வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

ரெய்னாவுக்கு CSK போட்ட 'ட்வீட்'.. உடனே 'சின்ன' தல போட்ட கமெண்ட்.. அப்படி என்ன விசேஷம்?

Tags : #MOTHER IN LAW #LOVE #DAUGHTER IN LAW #MELT HEARTS #மாமியார் - மருமகள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mother in law love to her daughter in law melt hearts | Tamil Nadu News.