'கோயம்பேட்டில் மேலும் 21 பேருக்கு கொரோனா!'.. 'சென்னை, விழுப்புரம், கடலூர், அரியலூரில்' கோயம்பேடு மார்க்கெட் மூலம் உயரும் பாதிப்புகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 06, 2020 12:16 PM

சென்னை கோயம்பேடு தொடர்புடையவர்களுள் மேலும் 21 பேருக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை கோயம்பேடு தொடர்புடையவர்களுள் சுமார் 150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

more corona positive cases from koyamedu market in TamilNadu

நேற்றுவரை கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளுக்கு கோயம்பேட்டில் இருந்து சென்றவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டை ஒட்டியுள்ள காய்கறி சந்தை, சேமத்தமன் நகர், அய்யப்பா நகர் பகுதிகளில் மேலும் 21 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

குறிப்பாக விழுப்புரத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 169ஆக உள்ள நிலையில், இதில் கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரத்திற்கு சென்றவர்களின் எண்ணிக்கை மட்டும் 121-ஆக உள்ளது.