'தங்க புதையல் வேற எங்கையும் இல்ல...' உனக்கு ஏற்கனவே தெரிஞ்ச 'அந்த' இடத்துல தான் இருக்குது...! 'நம்பிக்கையோடு காத்திருந்த மனுஷன்...' - கடைசியில தான் உண்மை தெரிஞ்சிருக்கு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 14, 2021 12:17 PM

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள அரியபித்தன்பட்டியில் வசித்து வருகிறார் தங்கவேல் என்ற விவசாயி. இவரின் தொழில் ஏற்பட்ட நஷ்டத்தால், திருப்பூர் மாவட்டம் கனியூரை சேர்ந்த ஜோதிடர் சசிகுமாரை சந்தித்துள்ளார்.

Money jewelery robbery Dindigul claiming take gold treasure

அதன்பின் தங்கவேலின் வீட்டுக்கு வந்த சாமியார் சசிகுமார் தொழிலில் வளமாக இருக்க பரிகார பூஜை செய்யவேண்டும் என கூறி அதற்கு கட்டணமாக 2 லட்சம் ரூபாய் வரை தங்கவேலிடம் இருந்து கறந்துள்ளார்.

மேலும் தங்கவேலிடம் தனக்கு புதையல் இருக்கும் இடம் தெரியும் எனவும், புதையல் எடுத்துக் கொடுப்பதில் தான் எக்ஸ்பெர்ட் எனக்கூறி சில வீடியோக்களையும் ஜோதிடர் சசிக்குமார், தங்கவேலிடம் காண்பித்து அவரை பேராசையால் வசியம் செய்துள்ளார்.

இரண்டு நாட்கழித்து, தங்க புதையல் போதையில் இருந்த தங்கவேலிடம் அவரது தோட்டத்தில் தான் அந்த புதையல் இருப்பதாகவும், அதை எடுத்து தருவதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். மேலும் புதையல் எடுக்கவும் சில பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் போலி புதையல் ஆசாமி சசிகுமார்.

ஏற்கனவே, தொழில் நஷ்டத்தில் இருந்த தங்கவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் புதையல் கதையை நம்பி, ஜோதிடர் சசிகுமார் புதையல் எடுக்கும் பூஜைக்கு பணத்தையும் கொடுத்துள்ளனர். பூஜைக்கு பணமாக மட்டும் மொத்தம் 22 லட்சம் ரூபாய் வரை சசிகுமார் கறந்ததாக கூறப்படுகின்றது. தங்கவேலின் மனைவி மற்றும் மருமகளிடம் புதையல் தொடர்பாக பேசி ஆசை காண்பித்து 44 சவரன் நகைகளையும் சசிகுமார் பெற்றுள்ளார். அதோடு கார், புல்லட் மோட்டார் சைக்கிள், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றையும் சசிக்குமார் வாங்கி கொண்டதாக கூறப்படுகின்றது.

இவ்வளவு பணம், நகை, பொருட்கள் இருந்தும் பேராசையால் தங்க புதையலுக்கு ஆசைப்பட்டு பூஜையிலும் அமர்ந்துள்ளார் தங்கவேல். பல நாட்களாக புதையல் புதையல் என பாவ்லா காட்டி வந்த சசிகுமார் ஒருநாள் பூஜை செய்யவேண்டும் என கூறி, தங்கவேல் வீட்டில் உள்ள ஒருவரை உடலில் ஒட்டுத்துணியில்லாமல் நிற்க வைத்து பூஜை செய்துள்ளார். ஆனால் கடைசியில் புதையல் எடுத்து கொடுக்காமல், மாந்திரீகம் செய்து கை, கால்களை செயல்படாமல் முடக்கி விடுவேன் என்று மிரட்டி விட்டு சென்றுள்ளார்.

சசிகுமாரின் உண்மை முகத்தை அறிந்துகொண்ட தங்கவேல், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பின் போலீசார் வழக்கை விசாரிக்காமல் கிடப்பில் போட்ட நிலையில் திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவுபடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில் வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் பானுமதி, ஜோதிடர் சசிகுமார் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து ஜோதிடர் சசிகுமாரை கைது மேலும் ஜோதிடருடன் வந்து தங்கவேலை மிரட்டிய 4 பேரை தேடி வருகின்றனர்.

தங்கப்புதையலை நம்பி நடுத்தெருவுக்கு வந்த தங்கவேல் சம்பவம் அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் அனைவரும் ஒரு மூடநம்பிக்கை எதிரான பாடமாக இருக்கிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Money jewelery robbery Dindigul claiming take gold treasure | Tamil Nadu News.