எலெக்சனில் நிற்கும் 'பெண்' வேட்பாளர்,,.. "அவங்களோட பேர வெச்சே 'ஃபேமஸ்' ஆயிடுவாங்க போல... அது தான் மிகப் பெரிய 'ஹைலைட்'"!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாசீனாவில் கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்தையும் கடந்த ஓராண்டாக கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா தொற்று கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கொரோனா, சானிடைஸர் உள்ளிட்ட கொரோனா தொடர்பான பெயர்களை வைத்தனர்.
இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் கடந்த அக்டோபர் மாதம் மருத்துவமனையில் கொரோனா தொற்று ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் தனது பெயரை தெரிவிக்க தயக்கம் காட்டியுள்ளார்.
பின்பு தான் தெரிந்தது அவரது பெயர் கொரோனா தாமஸ் என்பது. சிறு வயதிலே தனது தந்தை தனக்கு வித்தியாசமாக பெயர் சூட்ட எண்ணி கொரோனா என்ற பெயரை வைத்துள்ளார். இதனிடையே, கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்த போதே தனது பெயரை பயன்படுத்த தயங்கியுள்ள்ளார். மருத்துவமனையில் அவர் இருந்த போது, அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒருவழியாக கொரோனாவை தாங்கள் கண்டுபிடித்து விட்டதாக கிண்டல் செய்துள்ளனர்.
கொரோனா தாமஸிற்கு தொற்று உறுதியான போது, அவர் கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு பிறந்த குழந்தைக்கும் தொற்று உறுதியாகியிருந்த நிலையில், அக்டோபர் மாத இறுதியில் தாய் மற்றும் குழந்தை ஆகியோர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது அவர் உள்ளாட்சி தேர்தலில் கொல்லம் பகுதியிலுள்ள மத்திலில் என்னும் தொகுதியில் பிஜேபி கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.
கொரோனா தாமஸ் அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்த நிலையில், அவரது கணவர் ஜினு சுரேஷ் தான் பிஜேபி கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால், மத்திலில் தொகுதியில் பெண் வேட்பாளர் தான் போட்டியிட வேண்டும் என்பதால் கொரோனா தாமஸ் போட்டியிடுகிறார்.
தற்போது தனது பெயரை நினைத்து பெரிதாக தயக்கமில்லை என தெரிவித்த கொரோனா தாமஸ், தனது பெயருக்கு உள்ள புகழின் மூலம் தான் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவேன் என உறுதியாக அவர் தெரிவித்துள்ளார்.