'மனைவிக்கு உடனே ஆப்பரேஷன் பண்ணனும்...' 'காணாமல் போன காசு...' 'பதறிய கணவன்...' - கெடச்ச ஒரே ஒரு க்ளூவினால் நடந்த டிவிஸ்ட்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் காவலாளியாக பணிபுரிபவர் தன் மனைவியின் சிகிச்சைக்காக சேர்த்து வைத்த 4.70 லட்சம் ரூபாயை கொள்ளையடிக்கப்பட்டு 2 மாதங்களுக்குப்பிறகு போலீசார் மீட்டுக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தைச் சேர்ந்த 55 வயதான ஷபிலால் அண்ணா நகர் மேற்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். மேலும் அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் தரைதளத்திலிருக்கும் சிறிய அறைதான் ஷபிலாலும் அவரது மனைவியும் கடந்த 13 ஆண்டுகளாக வசித்து வந்தார்.
இந்நிலையில் ஷபிலாலின் மனைவி கோபிலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதுள்ளது. மருத்துவ பரிசோதனையில் கோபிலாவுக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பது தெரியவந்து, அதற்கான அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அறுவை சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் செலவாகும் என்று கூறியதால் ஷபிலால், தனக்கு கிடைக்கும் வருமானத்திலிருந்து மாதந்தோறும் சிறிய தொகையை மருத்துவச் செலவுக்காக சேமித்து 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை ஒரு துணியில் கட்டி வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி பணம் வைத்திருந்த துணியை ஷபிலால் தேடியப்போது வைக்கப்பட்டிருந்த பணம் இல்லை. அதோடு 2 சவரன் தங்க நகைகளும் மாயமாகியிருந்தன. அதனால் அதிர்ச்சியடைந்த ஷபிலால், திருமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக உதவி கமிஷனர் சிவக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலிருக்கும் சிசிடிவி கேமராப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தத்தில், டவுசர் அணிந்து இளைஞர் ஒருவர் அடுக்குமாடிக் குடியிருப்பை நோட்டமிடும் காட்சிகளும் சுவர் ஏறிக் குதித்து உள்ளே செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தது.
அப்போது இளைஞரின் சாயலை வைத்து அண்ணாநகர் மேற்கு, பாடிகுப்பம் சாலையில் 11-ம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் விக்னேஷ் (23), கொளத்தூரைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. விக்னேஷ் மீது திருமங்கலம், அண்ணாநகர், திரு.வி.க நகர், திருமுல்லைவாயல், வில்லிவாக்கம் ஆகிய காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுலையில் இருப்பது தெரியவந்தது.
மேலும் தீவிர விசாரணை ஷபிலால் வீட்டில் பணம், தங்க நகைகளைக் கொள்ளையடித்ததும் விக்னேஷ் எனவும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து 4 லட்சத்து 70 ஆயிரம், தங்கநகைகளை பறிமுதல் செய்தனர். மனைவியின் மருத்துவ செலவுக்காக சேமித்து வைத்திருந்த பணம், நகைகள் திரும்பக் கிடைத்த தகவல் ஷபிலாலுக்கு போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், `'கடந்த 6 மாதங்களாக திருமங்கலம், அண்ணா நகர், திரு.வி.க நகர், திருமுல்லைவாயில், வில்லிவாக்கம் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் திறந்திருக்கும் வீடுகளை விக்னேஷ் நோட்டமிடுவதும், அதன்பின் வீட்டுக்குள் நுழைந்து செல்போன், பணம், நகைகளைக் கொள்ளையடிப்பார். அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறார். ஷபிலாலின் வீட்டுக்குள், செல்போன் திருட வந்த இடத்தில் இவ்வளவு பணமா என அதைத் திருடிக் கொண்டு நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சென்று விருந்து, மது என உல்லாசமாக இருந்து பணத்தை விக்னேஷ் செலவழித்திருக்கிறார். அதன்பிறகு சென்னை திரும்பிய சமயத்தில்தான் வாகனச் சோதனையில் சிக்கிக் கொண்டார்' என்று தெரிவித்துள்ளனர்.