"தலைவர் மறைந்த போது அந்த வேதனையை விட"... வாழ்வில் மறக்க முடியாத தருணம்.. எமோஷனல் ஆன முதல்வர் MK STALIN!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Mar 02, 2023 02:35 PM

தமிழக முதல் அமைச்சராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருபவர் மு.க. ஸ்டாலின். இவர் மார்ச் 1 ஆம் தேதி, தனது 70 ஆவது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடி இருந்தார். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உலகெங்கிலுமுள்ள தமிழக மக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரை உலகினர், தொழில் துறையினர் என பலரும் தங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

MK Stalin about his emotional moments in life exclusive

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | தமிழ் சகோதரர்களுக்கு.. கனடாவில் அடித்த தாறுமாறு அதிர்ஷ்டம்.. விஷயம் தெரிஞ்சதும் ஆனந்த கண்ணீரே வந்துடுச்சாம்!!

திமுக கட்சியில் பல்வேறு பொறுப்பில் அங்கம் வகித்து தமிழக மக்களுக்காக உழைத்து வந்த முக ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல் அமைச்சராக பதவியேற்று இருந்தார். தொடர்ந்து, சுமார் இரண்டு ஆண்டுகளாக மக்கள் பிரச்சனைகளை நேரடியாக களத்தில் இறங்கி தீர்வு செய்வதில் முதல்வர் முக ஸ்டாலின் முனைப்பு காட்டி வருகிறார்.

இந்த நிலையில், நமது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளார். இதனை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி இருந்தார். அரசியல் தவிர தனது பெர்ஷனல் பக்கங்கள் குறித்து நிறைய விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்தி இருந்தார்.

அப்போது மகிழ்ச்சியாக இருந்த தருணம் குறித்தும், மனமடைந்து போன தருணம் குறித்தும் கோபிநாத் கேள்விகளை எழுப்ப இதற்கு பதில் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "நான் மனம் உடைந்து போய் அதுக்கப்புறம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அதுக்கு ஒரு உதாரணம் சொல்லனும்னா, தலைவர் மறைந்த போது எவ்வளவு வேதனையில் இருந்திருப்பேன்னு உங்களுக்கு தெரியும். அந்த வேதனையை விட தலைவரை அடக்கம் செய்வதற்கு, தலைவர் விரும்பிய மாதிரி அண்ணா பக்கத்தில் உறங்கணும், அங்க ஓய்வெடுக்கணும்னு விரும்பினார்.

MK Stalin about his emotional moments in life exclusive

அதனால அந்த இடத்தை எப்படியாவது பெற்றிடனும்னு ஒரு முடிவோட இருந்தேன். அதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். ஆனா அன்னைக்கு இருந்த ஆட்சி அதற்கான அனுமதி கொடுக்கல. அதுக்கப்புறம் என்ன செய்றதுன்னு தவிச்சிட்டு இருந்தப்போ, ஒவ்வொருத்தரும் ஒன்னு ஒன்னு சொல்லிட்டு இருந்தாங்க. தலைவருடைய உடலை வச்சுக்கிட்டு அவரை அசிங்கப்படுத்தி விடக்கூடாது, அவரோட புகழுக்கு இழுக்க ஏற்படுத்திடக் கூடாதுன்னு இருந்தேன். அதனால Law and Order பிரச்சனை வரும், சட்ட ஒழுங்கு நிலை கெட்டுப் போகும்ன்னு அப்படிப்பட்ட முயற்சி எல்லாம் ஈடுபடக்கூடாதுன்னு பொறுத்து இருந்து நீதிமன்றத்தை அணுகி, நீதிமன்றத்தோட தீர்ப்பு வராத வரைக்கும் அப்படியே தவிச்சுக்கிட்டு இருந்தோம்.

ரெண்டு மணி அளவில் நீதிமன்றத்தில் இருந்து இடத்தை கொடுக்கணும் அப்படின்னு தீர்ப்பு வந்துச்சு. அப்ப எனக்கு ஏற்பட்டது ஆனந்தம்ன்னு சொல்றதா, இல்ல உணர்ச்சின்னு சொல்றதா, இல்லை  வெளிச்சம் சொல்றதா, இல்ல வேதனைன்னு சொல்றதா. அப்படியே மனம் உடைந்து மகிழ்ச்சி வெளிப்படுத்த முடியாத அளவுக்கு என்னை அறியாமலே நான் பப்ளிக் முன்னாடி அழுதேன். அது தான் மறக்க முடியாத தருணம். அவர் நினைச்சதை நிறைவேத்திட்டேன்னு இருந்தது" என தெரிவித்தார்.

Also Read | "இதையும் பச்சைக் குத்தலாமா?".. இளம் தம்பதியின் வைரல் டாட்டூ.. பின்னணி தெரிஞ்சு லைக்குகளை அள்ளி வீசும் நெட்டிசன்கள்!!

Tags : #MKSTALIN #CM MK STALIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. MK Stalin about his emotional moments in life exclusive | Tamil Nadu News.