பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கேரள முதல்வர் பினராயி விஜயன்.. மலையாளத்தில் ரிப்ளை கொடுத்த தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | "நிலநடுக்கம் மாதிரி இருந்துச்சு".. நேருக்கு நேர் மோதிய ரயில்கள்.. 36 பேர் மரணம்.. பெரும் சோகம்..
முதல்வர் முக.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல்வர் தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் எளிமையான முறையில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
இதனிடையே முதல்வர் முக.ஸ்டாலினுக்கு நாட்டின் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு அரசியில் கட்சி தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது வாழ்த்து செய்தியில்,"இன்று பிறந்தநாள் காணும் தோழர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். தமிழ்நாடு - கேரளா இடையேயுள்ள பிணைப்பை வலுப்படுத்த நீங்கள் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது. கூட்டாட்சி, மதச்சார்பின்மை மற்றும் நம் தாய்மொழிகளின் பாதுகாப்போடு, நீங்கள் நாடு முழுவதும் இதயங்களை வென்றுள்ளீர்கள். உங்களுக்கு மென்மேலும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றி கிடைத்திட வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில், கேரள முதல்வரின் வாழ்த்து செய்திக்கு மலையாளத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார் முதல்வர் முக.ஸ்டாலின். இதுபற்றி அவர் எழுதியுள்ள பதிவில்,"தங்களுடைய வாழ்த்துக்கு நன்றி சகோதரரே. தென்னிந்தியாவில் இருந்து பாசிச சக்திகளை அகற்ற நாம் என்றென்றும் ஒன்றிணைந்து செயல்படுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
ആശംസകള്ക്ക് നന്ദി സഖാവേ.
തെക്കേ ഇന്ത്യയില് നിന്ന് ഫാസിസ്റ്റ് ശക്തികളെ എന്നെന്നേക്കുമായി അകറ്റി നിര്ത്താന് നമുക്ക് ഒരുമിച്ചു പ്രവര്ത്തിക്കാം. https://t.co/1Mf3CABPHf
— M.K.Stalin (@mkstalin) March 1, 2023
Also Read | கொரோனா எங்கிருந்து பரவியது?.. அமெரிக்க புலனாய்வுத்துறை இயக்குனர் சொன்ன பரபரப்பு தகவல்கள்.!

மற்ற செய்திகள்
