சாலையோரம் கிடந்த நாட்டுத்துப்பாக்கி, பைக்.. ரோந்து போலீசை பார்த்ததும் தப்பியோடிய கும்பல்.. கிருஷ்ணகிரி அருகே அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாலையோரத்தில் நாட்டுத் துப்பாக்கி, இருசக்கர வாகனம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூங்கிலேரி கிராமத்தில் இருந்து மண்ணாடிப்பட்டு செல்லும் சாலையில் நேற்றிரவு காவல் உதவி ஆய்வாளர் குட்டியப்பன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது மூங்கிலேரி அடுத்த மண்ணாடிப்பட்டி காப்பு காட்டு சாலையோரம் செல்லும் மர்ம நபர்கள் நான்கு பேர் நின்றுகொண்டு இருந்துள்ளனர்.
அப்போது போலீஸ் வாகனம் வருவதைப் பார்த்த அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அவர் இருந்த இடத்தில் இரண்டு இருசக்கர வாகனம், 2 கைப்பேசி, ஒரு நித்தி பேட்டரி, நாட்டு துப்பாக்கி கிடந்துள்ளது. இதனைப் பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனை அடுத்து அப்பொருள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்கள் நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நாட்டுத்துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
