'அவர கொஞ்சம் மொதல்லையே...' 'பேட்டிங் பண்ண விடுங்கப்பா...' அவரு அடிக்குற 'ஷாட்' எல்லாமே பெர்ஃபெக்ட்...! - இந்திய வீரர் குறித்து மைக்கேல் வான்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அகமதாபாத், மோடேராவில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் ரிஷப் பந்த் சதமடித்தார். ஆனால், 8-வதாக களமிறங்கி 96 ரன்கள் அடித்த வாஷிங்டன் சுந்தர் குறித்து யாரும் பெரிதாக பேசவில்லை என கிரிக்கெட் ரசிகர்கள் பலர் தெரிவித்துள்ளனர்..
இந்த நிலையில் தற்போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வான் கருத்துத் தெரிவித்துள்ளார். “வாஷிங்டன் சுந்தர் அற்புதமான வீரர். அவர் 8-வது வரிசையில் களமிறங்கி ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சைச் சிறப்பாக எதிர்கொண்ட விதம் என்னை அசர செய்தது” எனக் கூறியுள்ளார்.
இவ்வளவு அருமையாக பேட்டிங் செய்யும் ஒருவரை கடைசியில் களமிறக்காமல் முன்கூட்டியே களமிறக்க முயற்சி செய்யுங்கள் என பிசிசிஐக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் மைக்கேல்.
அவரை மிடில் ஆர்டர் அல்லது அதற்குமுன் அவரைக் களம் காண செய்ய வேண்டும். பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் இந்திய அணிக்கு இவர் உதவ முடியும். அவருடைய ஷாட்கள் அனைத்துமே மிக சரியாக உள்ளது. லென்த் பந்துகளை தயக்கமில்லாமல் எதிர்கொள்கிறார். கால்களைச் சரியாக நகர்த்துகிறார்.
அதிக டெஸ்ட் போட்டிகளில் சுந்தர் பங்கேற்கவில்லை என்றாலும், வயது 21 மட்டுமே ஆனபோதும், எவ்வித அழுத்தமும் இன்றி பந்துகளை எதிர்கொள்வது என்னை மிகவும் வியக்க வைக்கிறது” எனக் கூறியுள்ளார்.