'மேன் ஆஃப் தி மேட்ச்'க்கு... 'இப்படி ஒண்ணு பரிசா கெடைக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல...' - சிரிச்ச முகத்தோடு வாங்கிட்டு போன வீரர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமத்திய பிரதேசத்தில் கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் ஒருவருக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. நிறைய மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாய்க்கு மேல் உள்ளது. அதிலும் சில பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டிவிட்டது.
இந்த கடும் விலை உயர்வின் விளைவாக, தினசரி பயன்பாட்டு பொருளான பெட்ரோல் தற்போது பரிசு பொருளாகவும், விருது கொடுப்பது போன்றும் அதை பலர் வழங்குகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதில் இறுதிப் போட்டி பிப்ரவரி 28ஆம் தேதியில் நடைபெற்றது. இந்த போட்டியில் சலாவுதின் அப்பாஸி என்ற வீரர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆட்ட நாயகனான சலாவுதினுக்கு பரிசாக ஐந்து லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மேடையில் புன்சிரிப்புடன் 5 லிட்டர் பெட்ரோலை பெற்றுக்கொண்ட சலாவுதின் அப்பாஸியின் படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
