'பின்னால டிராக்டர் வருது...' 'கோலியும், ரூட்டும் நெலத்த ஆராய்ச்சி பண்றாங்க...' 'முன்னாள் வீரர் பகிர்ந்த வைரல் போட்டோ...' - இதெல்லாம் ஓவர் நக்கல்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியப் பிட்ச்கள் குறித்து ஜிம்பாப்வே முன்னாள் விக்கெட் கீப்பர் கேப்டன் ததேந்தா தைபு நக்கல் செய்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் பிட்ச்கள் குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஐந்து நாள் டெஸ்ட் இரு நாட்களில் முடிந்ததால் பலரிடையே பல கருத்துகள் பகிரப்பட்டது.
கடந்த அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 842 பந்துகள் வீசப்பட்டு அதில் 30 விக்கெட்டுகள் காலியாகியுள்ளன. 1935-க்குப் பிறகு ஒன்றரை நாளில் முடிந்த டெஸ்ட் போட்டி இதுவாகவே இருக்கும்.
இந்த நிலையில் 4-வது டெஸ்ட் பிட்ச் எப்படி இருக்கும் என்று அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கேப்டன் ததேந்தா தைபூ நக்கலாக ஒரு ட்வீட் செய்துள்ளார்.
அதாவது அடுத்து என்ன விவசாய நிலமா என்பது போல் டிராக்டர் ஒன்று பின்னணியில் இருக்க விராட் கோலியும் ஜோ ரூட்டும் விவசாய நிலத்தை பிட்சை ஆய்வு செய்வது போல் ஆய்வு செய்வதாக ஒரு படத்தையும் வெளியிட்டு செம கிண்டல் செய்துள்ளார். இது வைரலாகி வருகிறது.
அதில் டிராக்டர் வயல்வெளியுடன் ஜோ ரூட், விராட் கோலி அமர்ந்து பிட்சைப் பார்ப்பது போல், “4வது டெஸ்ட் பிட்சை 2 கேப்டன்களும் பார்ப்பது போல் தெரிகிறது” என்று செம கிண்டல் செய்துள்ளார்.
Looks like both Captains are interested in the 4th test pitch. 😁 pic.twitter.com/qZK3Oeqtzm
— Tatenda Taibu (@taibu44) February 26, 2021