'அவரு பேட்டிங் பண்ண வர்றது...' 'மனைவிய பீச்சுக்கு கூட்டிட்டு போற மாதிரி இருக்கு...' - முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர்கள் மூன்று முடிந்துள்ளது. இந்த நிலையில் பிட்ச் குறித்த விமர்சனங்கள் அதிக அளவில் எழுந்துள்ளது. பிட்ச் விவாகரம் குறித்து சுனில் கவாஸ்கர் பேசினார், அப்போது ரோஹித் ஷர்மா பேட் செய்ய வரும்போது ஏதோ தன் மனைவையையும் குழந்தையையும் பீச்சுக்குக் கூட்டிச் செல்வது போல் ரிலாக்ஸாக வருவதாக கூறினார்.
சுனில் கவாஸ்கர் கூறியிருப்பதாவது, சீரான பந்துகள் மோசமாக வரும் பிட்ச் இல்லை இது. பந்துகள் பயங்கரமாக ஆட முடியாத அளவுக்கு எழும்பவில்லை. அதே போல் பந்து கணுக்காலுக்குக் கீழ் செல்லும் நிலைமையும் இல்லை. இங்கு பவுன்ஸ் உண்மையாகத்தான் இருந்தது. ஆம், ஸ்பின் இருந்தது, மறுக்கவில்லை, ஆனால் பேட்ஸ்மென்கள் திரும்பும் பந்துகளையும் நேராக வரும் பந்துகளையும் கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும்.
சவாலான பிட்ச்தான் என்றாலும் வெறுப்பூட்டும் அளவுக்கு பெரிய சவால் அல்ல. ஆட்டமிழந்ததைப் பார்த்தால் இருதரப்பு பேட்ஸ்மேன்களுமே தவறு செய்து ஆட்டமிழந்தார்கள் என்பது தான் உண்மை.
இந்த இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரோஹித் சர்மாவின் ஆட்டம் இந்தப் பிட்ச்சில் பேட் செய்ய முடியும் என்பதைக் காட்டியுள்ளது. இங்கிலாந்து பேட்ஸ்மென்களின் தொய்ந்து போன உடல் மொழிதான் ஏமாற்றமளிக்கிறது. குறைந்தது இரண்டு இந்திய வீரர்களின் உடல் மொழி அதற்கு நேர் எதிராக இருந்தது.
மேலும், ரோஹித் சர்மா பேட் செய்ய வரும்போது ஏதோ தன் மனைவையையும் குழந்தையையும் பீச்சுக்குக் கூட்டிச் செல்வது போல் ரிலாக்ஸாக இறங்குகிறார்.
அதே போல் விராட் கோலி தவறு செய்த ஒருவனைக் கைது செய்ய வரும் போலீஸ் போல் இறங்குகிறார். ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மிகவும் களைப்புடன் இறங்குகின்றனர். ஆனால் ஜோ ரூட் பேட்டிங் அப்படி அல்ல.
நிதானமான விமர்சனங்களைப் பார்த்தால் நமக்கு சில தீவிர விமர்சனங்கள் நியாயமற்றதாகவே தெரிகிறது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.