'உன்ன ஏன் இன்னும் டீம்ல சேர்க்கலன்னு கேட்பாங்க...' 'என்கிட்ட அப்போ பதில் இல்ல...' 'பட்ட கஷ்டங்கள் கொஞ்சமா நஞ்சமா...' - நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த இந்திய வீரர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் போட்டியில் பட்டையை கிளப்பி வரும் கிரிக்கெட் வீரர் அக்ஷர் படேல் தான் மூன்று வருடங்களாக சந்தித்த துயரங்களை குறித்து பேட்டியளித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையே மோடேராவில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் டெஸ்ட் போட்டியில் தன் அபார பந்து வீச்சால் கலக்கி வருகிறார் இந்திய அணி வீரர் அக்ஷர் படேல். கடந்த டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளாரான அக்ஷர் படேல் 11 விக்கெட்களை கைப்பற்றி அசத்தி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்
இந்நிலையில் தற்போது அக்ஷர் தான் சந்தித்த துயரங்கள் குறித்தும், தனது சிறப்பான செயல்பாட்டிற்குக் காரணம் என்ன என்பது குறித்தும் ஹார்திக் பாண்டியாவுடன் அக்ஷர் மைதானத்தில் உரையாடியுள்ளார்.
அப்போது, 'எனக்குக் கடந்த 3 ஆண்டுகளாகவே இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அந்த தருணத்தில் தான் நான் என்னிடம் இருந்த குறைகளைக் கண்டுபிடித்து அதற்கேற்றாற்போல் பயிற்சி செய்து வந்தேன். பவுலிங், பேட்டிங் இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்தேன்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அணியில் இடம் கிடைக்காதபோது பலர் என்னிடம் வந்து, 'ஏன் உனக்கு அணியில் இடம் கிடைக்கல' எனக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் சொல்ல எனக்கு பதிலே இருந்தது இல்லை. சரியான வாய்ப்பு வரும் போது நான் என்னை நிரூபிப்பேன் என என்னிடம் நானே கூறிக்கொண்டேன்' எனக் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தன் சொந்த ஊரில், சொந்த ஊர் மக்களின் முன் விளையாடுவது நல்ல உணர்வைத் தருவதாகவும், என் ஊர்காரர்கள் முன் அற்புதமாக விளையாட வேண்டும் என்ற உந்து சக்தி கிடைக்கும். அடுத்த டெஸ்டிலும் சிறப்பாக விளையாட போவதாகவும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.