'வானத்தில் வட்டமிட்ட பறவைகள்!'.. எதார்த்தமாக சென்று பார்த்த உறவினர் கண்ட உறையவைக்கும் காட்சி! இளம் தாய்க்கு நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Sep 08, 2020 03:58 PM

கனடாவில் வசித்து வந்த 18 வயது இளம் தாய் Jessica Patrick Balczer. பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த இவர் தனது குழந்தைக்கு முத்தம் கொடுத்துவிட்டும், பாட்டியிடம் வெளியில் சென்று வருவதாக சொல்லிவிட்டும் சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவேயில்லை.

2 yrs after young mother died her family vows to find answers

இதனையடுத்து  Jessica-வை அனைவரும் தீவிரமாக தேடிவந்தனர். அதன் பிறகு 15 நாட்கள் கழித்து, jessicaவின் உறவுக்கார பெண்மணி ஒருவர் Smithers என்கிற பனிச்சறுக்கு பகுதிக்கு வந்துள்ளார். அவருடன் அவரது மகள் Jacquie Bows-ம் இருந்துள்ளார்.

அப்போது தூரத்தில் ஓரிடத்தை குறிவைத்து வானத்தில் வட்டமடித்தபடி பறவைகள் பறப்பதை கண்ட இவர்கள் அங்கு விரைந்து சென்று பார்த்தபோதுதான் jessicaவின் உடல் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ந்துள்ளனர். மேலும் அவரது ஆடையால் அவரது முகம் மறைக்கப்பட்டிருந்தது, அவரை யாரோ தூக்கிக் கொண்டுவந்துதான் அங்கு போட்டிருக்க வேண்டும் என்று அனைவரும் கருதியுள்ளனர். மேலும் jessica தனது குழந்தைக்கு முத்தம் கொடுத்துவிட்டு போன அதே ஆடையுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

2 yrs after young mother died her family vows to find answers

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்னும் இந்த வழக்கு தொடர்பாக யாரும் கண்டுபிடிக்கப்படாததாலும், கைது செய்யப்படாததாலும், கனடாவில் காணாமல் போன  பூர்வகுடி மக்களின் வழக்கைப் போலவே   jessica-வின் நிலையும் ஆகிவிடும் என அவரது குடும்பத்தினர் அஞ்சுவதாய் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 2 yrs after young mother died her family vows to find answers | World News.