‘இன்னும் 1 மாசத்துல கல்யாணம்.. அதுக்குள்ள இப்படியா நடக்கணும்’.. கீற்று கொட்டகையில் நின்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இளைஞர் ஒருவர் பாம்பு கடித்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்தவர் நீலமேகம், இவரது மகன் மோகன்ராஜ் (வயது 26). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நெட்வொர்க் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த சூழலில் கடந்த வாரம் சிலருக்கு சிம் விற்பனை செய்வதற்காக தனது வீட்டின் அருகே உள்ள கீற்றுக் கொட்டகையில் மோகன்ராஜ் காத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கிருந்த நாகப்பாம்பு ஒன்று மோகன்ராஜ் தீண்டியுள்ளது. இதனால் வலியில் அலறிய அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவருக்கு பெண் ஒருவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இந்த சூழலில் நாகப்பாம்பு கடித்து மோகன்ராஜ் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

மற்ற செய்திகள்
